வயதான ஹீரோயின்களை விரும்பும் ப்ருத்விராஜ்!

சமீபத்தில் ராவணன் பட சிறப்புக்காட்சியின்போது ஒரு டெலிவிஷன் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
"திரையில் என்னைவிட வயது அதிகம் கொண்ட பெண்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் சந்தர்ப்பம் அடிக்கடிக் கிடைக்கிறது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தேன். இந்தியாவின் மிக அழகான பெண். அவருடன் நடிப்பதில் எனக்கு முதலில் தயக்கமிருந்தது. விக்ரம் வேறு அடிக்கடி சீண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சகஜமாக காதல் காட்சிகளில் நடித்தேன்..." என்றார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்து அவர் சொன்னதுதான் மகா வில்லங்கமானது...
"என்னை விட வயசான ஹீரோயின்களோடு நடிப்பது எனக்குப் பிடித்தே இருக்கிறது. இதற்கு முன்பு அப்படி ஒரு ஹீரோயினோடு நடித்தேன். ஆனால் அவர் யார் என்று சொன்னால் என்னைக் கொன்றே போட்டுவிடுவார்" என்றார்.
உடனே பக்கத்திலிருந்த விக்ரம், 'எல்லாம்' தெரிந்தது போல விழுந்து விழுந்து சிரித்தார். அவர் யார் என்று சொல்வது போல விக்ரம் பாசாங்கு செய்ய, இவர் ஓடிப் பாய்ந்து தடுத்தார்...
ஆமா.. யாருங்க அது? உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மொழியை எங்களுக்கும் சொல்லுங்களேன்!


Click it and Unblock the Notifications











