ரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா?

பிரபுதேவா, நயனதாரா கல்யாண ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகமாக நடந்து வருவதாக செய்திகள் கூறும் நிலையில், ரமலத்தை இருவரும் பல்வேறு வழிகளில் தங்களது வழிக்குக் கொண்டு வருவதில் கிட்டத்தட்ட வெற்றி அடைந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
நயனதாரா தனது பங்குக்கு ரூ. 85 லட்சம் மதிப்புடைய வைர நெக்லஸை வாங்கிக் கொடுத்தாராம். அதேபோல பிரபுதேவாவும் தற்போது குடியிருந்து வரும் அண்ணா நகர் வீட்டை ரமலத்தே வைத்துக் கொள்ளலாம், அது போக ரூ. 3 கோடி ரொக்கப் பணத்தையும் கொடுத்து விட்டாராம்.
இதனால் ரமலத் சமாதானமாகியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து ரமலத்துக்கு வேண்டப்பட்டவர்கள் அவரிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. நான் எதையும் வாங்கவில்லை.இதெல்லாம் வதந்தி என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டாராம். இதை ஆணித்தரமாக அவர் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நயனதாராவோடு தற்போது ரவுண்டில் இருந்து வரும் பிரபுதேவா விரைவில் சென்னை வருகிறாராம். அப்போது ரமலத்திடம் திருமணம் தொடர்பாக இறுதியாக பேசவுள்ளாராம். அவர் சம்மதித்தால் சரியாம், இல்லையென்றால் மீறி நடக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











