கேப்டன் டிவியைத் துவக்கி வைக்கிறார் டோணி?

கேப்டன் என்று தன்னை எல்லோரும் அழைத்தாலும், உண்மையான கேப்டன் யாராவது வந்து அந்த சேனலைத் துவக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
உடனே அவருக்கு டோணியை நினைவூட்டியிருக்கிறார்கள். அவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாச்சே!
நல்ல ஐடியாவா இருக்கே என்று கூறிய விஜய்காந்த் தரப்பு, கேப்டன் டோணியைச் சந்தித்து தங்கள் தொலைக்காட்சி மற்றும் விஜய்காந்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல, அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம் டோணி.
ஏப்ரல் 14-ம் தேதி தான் சென்னையில்தான் இருப்பேன் என்றும், நிச்சயம் வந்து திறந்து வைக்கிறேன் என்றும் டோணி சொன்னதாக கேப்டன் டிவி அலுவலகம் சொல்கிறது.
வருவாரா டோணி...? பார்க்கலாம்!
Comments


Click it and Unblock the Notifications