For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குட்டி ராதிகா எங்கே?

  By Staff
  |

  Kutty Radhika
  இயற்கை படத்தில் நடித்தாரே குட்டி ராதிகா நினைவிருக்கிறதா...

  வளமையும் செழுமையும் நிறைந்த இந்த மங்களூர் நடிகை, முதலில் கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் மீண்டும் கன்னட தேசத்தில் கரை ஒதுங்கினார். கணிசமான வாய்ப்புகளும் வந்தன.

  கூடவே ஒரு காதல் ஆஃபரும் வந்தது, ஒரு மிக மிக முக்கியப் பிரமுகரிடமிருந்து. அவர் கர்நாடகத்தின் அரசியல் விவிஐபி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  கலை வாய்ப்பை விட காதல் வாய்ப்பில் அதிக சுவாரஸ்யமும் ஆதாயமும் இருந்ததால், நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அவரது ஆஸ்தான நாயகியாகிவிட்டதாக கிசுகிசு எழுந்தது.

  ராதிகாவுக்கு அவர் ரூ.60 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய எஸ்டேட்டையே பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்றார்கள். மேலும் பெங்களூரின் முக்கியப் பகுதியில் ரூ.22 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றும் கிடைத்ததாம்.

  இந் நிலையில் தான் ராதிகாவின் வீட்டில் வருமான வரி சோதனையும் நடந்தது. பரபரப்பான இந்தக் காதல் பத்திரிகைகளில் கடந்த ஆண்டு வெளியானதில், கர்நாடகாவே களேபரமானது.

  இந்தச் செய்தி வெளியான பிறகு தலைமறைவாகிவிட்டார் குட்டி ராதிகா. எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை. திடீரென ஒரு நாள் தனக்குத் திருமணமாகிவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

  (ஏற்கனவே இவர் திருமணமானவர் என்றும் கணவரை விட்டுவிட்டு வந்து தான் சினிமாவிலேயே நடிக்க ஆரம்பித்தார் என்றும் ஒரு கிசுகிசுவும் உலா வந்தது)

  கொஞ்ச நாள் கழித்து ராதிகா கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தைப் பெற்றுக் கொள்ள லண்டன் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

  குட்டி ராதிகாவுக்கு குழந்தைப் பிறந்ததா... அவர் இப்போது எங்கேயிருக்கிறார் போன்ற தகவல்கள் இன்றுவரை மர்மமாகவே உள்ளன.

  இதற்கிடையே இந்தக் நிஜக் கதையையே திரைப்படமாக எடுக்க முயன்றார் கன்னட பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் ரவி பெலகெரே.

  'முக்ய மந்திரி ஐ லவ் யூ' ('ஐ லவ் யூ முதல் மந்திரி')- இதுதான் படத்தின் தலைப்பு. இந்தப் படம் துவங்கப்பட்ட செய்தியை ஏற்கெனவே தட்ஸ் தமிழில் வெளியிட்டிருந்தோம்.

  ஆனால் இந்தப் படத்தை எடுக்க முன்னாள் முதல்வர் தேவ கௌடா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.

  ஆனால் வழக்கின் முடிவு ரவிக்கு சாதகமாக வந்துவிட்டாதால், இப்போது அந்தப் படத்தை எடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

  கடந்த நவம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இந்தப் படத்தைத் துவக்கி வைத்தவர் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான அம்பரீஷ். இப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்கவிருந்தவர் முன்னாள் முதல்வரின் பேத்தி குத்து ரம்யா. ஆனால் கதையில் உள்ள வில்லங்கத்தைப் பார்த்து, பின்னர் நடிக்க மறுத்துவிட்டாராம் ரம்யா.

  இப்போது அந்த வேடத்தில் பூஜா காந்தி (தமிழில் சஞ்சனா என்ற பெயரி்ல் நடித்தவர்) நடிக்கிறார்.

  குட்டி ராதிகா வாயைத் திறந்தால்தான் இந்தப் படம் அவரது கதையா அல்லது புதுக்கதையா என்பது தெரியவரும்...வருவாரா ராதிகா?

  ரொம்பத்தான் கண்ணைக் கட்டுதேப்பா...

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X