செல்வராகவனின் புதிய காதல்-சினிமா தொடர்பில்லாத பெண்ணை மணக்கிறார்

இயக்குனர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்து பிரிந்தனர். செல்வராகவனுக்கும் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சினிமாத் துறையில் இல்லாத பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு பெண்ணுடன் எனக்கு காதல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் அவர் நடிகை அல்ல. ஏன்... அவர் சினிமாத்துறையிலேயே இல்லை.
விரைவில் எல்லோருக்கும் அந்த பெண்ணை அறிமுகம் செய்வேன். இரண்டு மாதங்களாகத்தான் நாங்கள் காதலிக்கிறோம். தினமும் இரண்டு மணி நேரம் அந்த பெண்ணுடன்தான் செலவிடுகிறேன். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமுள்ளது என்கிறார் செல்வராகவன்.


Click it and Unblock the Notifications











