ராணாவுடன் டேட்டிங்? - ஸ்ரேயா விளக்கம்

சமீபத்தில் இருவரும் டேட்டிங் செல்லும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. டகுபதி ராணா குடும்பம் தெலுங்கில் மிகவும் புகழ்பெற்றது. பிரபல தயாரிப்பாளர் டி ராமாநாயுடு இவரது தாத்தா. நடிகர்கள் வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்றவர்கள் இவரது ரத்த சொந்தங்கள்.
எனவே பெரிய குடும்பத்துப் பிள்ளையை வளைத்துவிட்டார் ஸ்ரேயா என்று பரவலாகப் பேசப்பட்டது. விழாக்களுக்கு ஒன்றாக வரும் ஸ்ரேயாவும் ராணாவும் சமீபத்தில் ஒரு மலைப் பிரதேசத்துக்கு டேட்டிங் சென்றிருந்தார்களாம்.
இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "ராணாவின் குடும்பத்தை நான் நன்கு அறிவேன். அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராணாவுக்கும் எனக்கும் நட்பைத் தாண்டி வேறு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் டேட்டிங் வைத்துக் கொண்டதாக வந்தது பத்திரிகைகளின் வதந்திதான்," என்று வழக்கம்போல பழியைத் தூக்கி பத்திரிகைகள் மீது போட்டார்!


Click it and Unblock the Notifications











