சிம்பு படத்தில் சோனியா-தனுஷ் டென்ஷன்?

இயக்குநர் செல்வராகவனின் முன்னாள் மனைவி சோனியா அகர்வால். செல்வராகவனை விட்டுப் பிரிந்து வந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக முயன்று வந்தார் சோனியா.
இதற்காக புதிதாக புகைப்பட ஆல்பத்தை தயாரித்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு சுற்றுக்கு விட்டிருந்தார். இருப்பினும் அவருக்குத் திருப்திகரமாக எந்த வாய்ப்பும் வரவில்லை.
இந்த நிலையில் சிம்புவின் புதிய படத்தில் சோனியா அகர்வால் நடிக்க புக் ஆகியுள்ளார். இதனால் தனுஷ் தரப்பு டென்ஷனாகியுள்ளது. வேண்டும் என்றேதான் டென்ஷனைக் கிளப்பவே இவ்வாறு செய்துள்ளார் சிம்பு என்று தனுஷ் தரப்பு புலம்புகிறதாம்.
ஆனால் இதை சிம்பு தரப்பு மறுக்கிறது. கதைக்குத் தேவையான நடிகை சோனியாதான். இதற்காகத்தான் அவரை ஒப்பந்தம் செய்துள்ளோம். இதைப் போய் ஏன் பிரச்சினையாக்கப் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்களாம்.
இந்தப் புதிய சர்ச்சையால், தனுஷ், சிம்பு இடையிலான பூசல் புதிய ரூபத்தை அடைந்திருப்பதாக சினிமா உலகில் பேசிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











