திரிஷா-ரம்யா கிருஷ்ணன் லடாய்?

By Staff

எனக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. அப்படி வெளியான செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார் திரிஷா.

திரிஷா, ரம்யா கிருஷ்ணன் நட்பு திரையுலகம் அறிந்த செய்தி. கடந்த பத்து வருடங்களாக இருவரும் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு செய்தி கிளம்பியது. ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் மகாத்மா படத்தில் நடிக்க வேண்டும் என திரிஷாவைக் கேட்டாராம். இப்படத்தில் தெலுங்கு ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. இது அவருக்கு 100வது படம்.

ஆனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் திரிஷா. இதனால் இருவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டு நட்பு முறிந்து விட்டதாக கூறியது அந்த செய்தி.

ஆனால் இதை திரிஷா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இது அடிப்படையே இல்லாத வதந்தி. அப்படி எதுவும் நடக்கவில்லை. ரம்யா எனது நெருங்கிய தோழியாகவே இருக்கிறார்.

நானும், அவரும் தொழில் சம்பந்தமாக எதுவும் பேச மாட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணவம்சியை எனக்கு நன்றாகவே தெரியும். உண்மை என்னவென்றால் மகாத்மா படத்தில் நடிக்க என்னைக் காட்டார் வம்சி. ஆனால் தற்போது நான் நடித்து வரும் படங்களில் பிசியாக இருப்பதால் மகாத்மாவில் நடிக்க முடியாமல் போனது. இதுதான் நடந்தது என்றார் திரிஷா.

திரிஷா கையில் இப்போது, தமிழில் சர்வம், சென்னையில் ஒரு மழைக்காலம், விண்ணைத் தாண்டி வருவாயா, ஆடுகளம் ஆகியவையும், இரண்டு தெலுங்குப் படங்களும் உள்ளன.

அப்புறம் எப்படிப்பா நேரமிருக்கும்..?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X