தற்கொலைக்கு முயன்றாரா காவ்யா?

By Staff

Kavya Madhavan with Husband
கணவரைப் பிரிந்து, விவாகரத்து பெற முயற்சித்து வரும் காவ்யா மாதவன் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

நிஷால் சந்திரா என்பவரை கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டு குவைத் போன காவ்யா, பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால் கணவர் நிஷாலும் அவரது சகோரரும் காவ்யாவை மோசமாக நடத்தினார்களாம். மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தினார்களாம்.

இதனால் வெறுத்துப் போய் தனது எர்ணாகுளம் வீட்டுக்குத் திரும்பினார். கடந்த ஒரு மாதமாக தனித்து வசிக்கும் அவர், நிஷாலுக்கு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது தற்போதைய நிலை குறித்து மனம் நொந்த காவ்யா அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

நேற்று இரவு முழுக்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இப்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்தச் செய்தி குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டனர், தற்போது காவ்யாவுடன் வசிக்கும் அவரது பெற்றோர். ஆனால் திருமணம் முறிந்ததை ஒப்புக் கொள்ளும் அவர்கள், இது காவ்யாவுக்கு பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளதாக வருத்தத்துடன் கூறினர்.

அவர் கவனத்தை புதிய திசையில் திருப்ப, காவ்யாவை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைக்கும முயற்சியில் இறங்கியுள்ளனர் அவரது திரையுலக தோழிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X