Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ரீசாந்தின் புதிய கேர்ள் பிரண்ட் ஷாசான் பதம்சி?: கிசுகிசுக்கும் பாலிவுட்
கிரிக்கெட் வீர்ரகளுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் ஏகப் பொருத்தம். எப்பொழுது பார்த்தாலும் யாராவது ஒரு கிரிக்கெட் வீரரோடு ஒரு பாலிவுட் நடிகையின் பெயர் அடிபடும். அன்மையில் விராத் கோலியும், சாரா ஜேனும் ஒன்றாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்த பட்டியலில் ஸ்ரீசாந்த் ஏற்கனவே உள்ளார். என்ன தற்போது புதிய கேர்ள் பிரண்ட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு தான். தில் தோ பச்சா ஹை ஜி படத்தில் நடித்த ஷாசான் பதம்சி தான் ஸ்ரீசாந்த் தோட்டத்தில் புதிய வரவு மலர் என்கிறார்கள்.
ஸ்ரீசாந்த் ஏற்கனவே ரியா சென்னுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பிறகு வேறு சிலருடனும் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது ஷாசானுடன் இணைத்துப் பேசப்படுகிறார். தெற்கு மும்பையில் ஷாசானும், ஸ்ரீசாந்தும் காரில் உலாவினர். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர் என்று அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த ஒருவர் கூறினார்.
என்ன ஷாசான், ஸ்ரீசாந்த்துடன் உங்கள் பெயர் அடிபடுகிறதே என்று அவரிடம் கேட்டால், எல்லா நடிகைகளும் சொல்லும் அதே அக்மார்க் பதிலான நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதைத் தான் கூறினார். நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். நான் பிறகு பேசுகிறேன் என்று கூறிவிட்டார்.
பந்து வீச்சை விட காதல் வீச்சில்தான் படு வேகமாக இருக்கிறார் ஸ்ரீசாந்த்!