கணவர் வீட்டாருடன் மீனா லடாய்?

தொன்னூறுகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, இப்போது பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகரைத் திருமணம் செய்து கொண்ட மீனா, சில தினங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார்.
திருமணமானாலும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து வருகிறாராம் மீனா. இது வித்யாசாகர் வீட்டில் சலசலப்பைக் கிளப்பியுள்ளதாம்.
மேலும் மீனா கண்டிப்பாக சிநிமாவில் நடிக்கக் கூடாது என அவரது மாமியார் வீட்டினர் கூறியதால், இப்போது கணவர் வீட்டுக்கே செல்லாமல் சென்னையில் முகாமிட்டுள்ளாராம்.
இந்த நிலையில் திடீரென்று மீண்டும் நடிக்க வந்துள்ளார் மீனா.
மலையாளத்தில் 'தம்பிக்கோட்டை' என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக நரேனும், நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடிக்கின்றனர். நரேனுக்கு அக்காவாக இந்தப் படத்தில் நடிக்கிறார் மீனா.
கணவர் குடும்பத்தினர் விரும்பாத நிலையில் மீனா திடீரென்று சினிமாவில் நடிக்க வந்திருப்பது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாம். இதுபற்றி மலையாள பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
விஷயம் தெரிந்து தமிழிலும் அக்கா அண்ணி என செகன்ட் இன்னிங்க்ஸ் ஆட வாங்க அன அழைப்பு மேல் அழைப்பு விடுகிகறார்களாம். கண்டிப்பாக நடிக்கிறேன் என்று அனைவருக்கும் பச்சைக் கொடி காட்டிவிட்டாராம் மீனா!
அப்ப.. சிவப்புக் கொடி கணவர் வீட்டாருக்கா?


Click it and Unblock the Notifications











