Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாராவின் கடைசி படம்?
தமிழில் நயன்தாராவின் கடைசிப் படம் என்ற பெருமை அநேகமாக பாஸ் என்கிற பாஸ்கரனுக்குக் கிடைக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
என்னாச்சு அம்மணிக்கு?
வெளியில் நயன்தாராவைச் சுற்றி ஆயிரம் கதைகள் உலவினாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மத்தியில் தொழிலும் ரொம்ப சின்ஸியர் என்று பெயரெடுத்தவர் நயன்தாரா.
தமிழைப் பொறுத்தவரை அவர் கடைசியாக ஒப்புக் கொண்ட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தையும் முடித்துவிட்டார். கைவசம் இருந்த விளம்பரப் படங்களின் ஷூட்டிங்கும் கூட முடிந்துவிட்டன. மலையாளத்தில் அவர் நடிக்கும் எலக்ட்ரா படமும் முடியும் தறுவாயில் உள்ளது.
அடுத்து?
புதிய படங்கள் எதையுமே ஒப்புக் கொள்ளவில்லை நயன்தாரா. எனவே அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, குடும்பம், குழந்தை என செட்டிலாகப் போகிறார் என்று மீடியா பரபரக்க ஆரம்பித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் கமலா திரையரங்கில் படம் பார்த்துவிட்டு ஹோட்டலில் தங்கினார். அப்போது அவரை ஒரு படத்துக்காக சந்திக்க தயாரிப்பாளரும் இயக்குநரும் முயன்றபோது, 'ஸாரி, நடிக்கும் ஐடியா இல்லை' என்று கூறிவிட்டாராம்!
அடுத்த ஒரு மாதம் முழுக்க பிரபு தேவாவுடன் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மால்ஷெஜ் மலைவாசஸ்தலத்தில் தங்கப் போகிறாராம்!