'ஐ லவ் கெளதம் மேனன்!'

By Sudha

Sameera Reddy
நான் கெளதம் மேனனின் ரசிகை. வாரணம் ஆயிரம் படத்தில் எனக்கு சின்ன ரோலாக இருந்தாலும் நிறைய ரசிகர்கள் கிடைக்கக் காரணமாக இருந்தார். ஐ லவ் கெளதம் மேனன் என்று உருகுகிறார் சமீரா ரெட்டி.

இந்தியில் கவர்ச்சி களேபரம் செய்து கொண்டிருந்த சமீராவுக்கு நல்ல டிரஸ் போட்டு வாரணம் ஆயிரம் படத்தில் தேவதை போல வரச் செய்தார் கெளதம் மேனன். இதன் மூலம் சமீராவுக்கு தமிழ் சினிமாவில் சரியான பெயர் கிடைத்தது.

இப்போது மீ்ண்டும் கெளதம் மேனன் படத்தில் நடிக்கிறார். கெளதம் மேனனே சொந்தமாக தயாரிக்கும் படமும் இது. பெயர் நடுநிசி நாய்கள்.

இப்படம் குறித்து சமீரா பேசும்போதே அவரது விழிகள் உற்சாகத்தில் அகல விரிகின்றன.

நடுநிசி நாய்கள் படத்தில் இதுவரை பார்த்திராத சமீராவைப் பார்ப்பீர்கள். தியேட்டர்களில் திகில் கொண்டாட்டம் களை கட்டப் போகிறது. மிகப் பெரிய அளவுக்கு இப்படமும், நானும் பேசப்படுவோம்.

வெறுமனே கிளாமர் ரோல்களில் மட்டும் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எல்லாவற்றிலும் பயணிக்கவே ஆசை. வாரணம் ஆயிரம் படத்தில் ரொம்ப சின்ன ரோல்தான். ஆனால், நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். அதே சமயம், முழு நீள ஹீரோயினாக நடித்த அசல் படத்தில் எனது கேரக்டரை பலரும் விரும்பவில்லை. எனவே இனிமேல் தேர்ந்தெடுத்த நடிக்கப் போகிறேன்.

கௌதம் மேனனின் ரசிகை நான். அவரோட படத்தில் தொடர்ந்து நடிப்பது எனக்கு கிடைத்த பரிசு. ஐ லவ் கௌதம் மேனன்.

அசல், வாரணம் ஆயிரம் இரண்டும் நல்ல கதைகள். அதற்கு மேல் அஜீத்தும், கெளதம் மேனனும் எனக்குப் பிடித்த ஆட்கள். எனவே அவற்றை உடனே ஒப்புக் கொண்டு நடித்தேன். அதற்காக பிரபலமான இயக்குநர்கள் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றில்லை.

நான் பார்த்த தமிழ்ப் படங்களில் ரொம்பப் பிடித்த படம் காக்க காக்க. ஆனால் அதே கெளதம் மேனன் தனது வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க கூப்பிட்டபோது மெய் சிலிர்த்துப் போய் விட்டேன் என்று மேனன் புராணம் பாடுகிறார் சமீரா.

சரி, சமீராவுக்கு ஸ்கூபா டைவிங் சூப்பராக தெரியுமாம். ஒருவேளை நடிகையாக வராவிட்டால் ஸ்கூபா டைவிங் டீச்சராகப் போயிருப்பாராம்.

என்ன பண்றது, மீன்களுக்குக் கொடுத்து வச்சது அவ்வளவுதான்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X