Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பார்வையாளர்களை அதிர வைத்த ராணி - வித்யா பாலனின் லிப் லாக்!
பிரபல பாலிவுட் நடிகைகள் ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
'நோ ஒன் கில்டு ஜெஸிகா' என்ற இந்திப் படத்தில் இருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின்போது இருவருக்கும் பிரச்சினையாகிவிட்டதாகவும், படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இருவருக்கும் சண்டை ஏதுமில்லை என்பதை நிரூபிக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார் படத்தின் தயாரிப்பாளர்.
இந்த நிகழ்ச்சியின்போது, "நமக்குள் பிரச்சினை என்று செய்தி வெளியானபோது துடித்துப் போனேன். நல்லவேளை இருவரும் உடனே பேசி இதில் தெளிவாகிவிட்டோம். ஆனால் ரசிகர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை", என்று வித்யா பாலன் வருத்தப்பட, அதற்கு "என்னிடம் ஒரு சூப்பர் ஐடியா உள்ளது" என்று பதில் சொன்னார் ராணி முகர்ஜி.
சொன்னதோடு நில்லாமல், உடனே வித்யா பாலனை இழுத்து கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்தமிட, பார்வையாளர்கள் அதிர்ந்தனர்.
ஆனால் நிகழ்ச்சி நடத்துநர்களோ ரொம்ப காஷூவலாக இருந்தனர் (எதையும் இப்படித்தான் ப்ளான் பண்ணி செய்யனும்!).