'நிஜ நடிகரின்' உள்குத்து... 'கனெக்ஷன் பார்ட்டிக்கு' கொண்டாட்டம்!
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு 2 கண்ணும் போக வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்தது சினிமா உலகம்.
ஆனால் நிஜத்திலும் ஓவராக நடிக்கும் இந்த நடிகர் ரொம்ப வித்தியாசமானவர்... தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை... கூடவே பணியாற்றிவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று ஆசைப்படும் 'மகா நல்லவர்'!
நீண்ட காலம் தனக்கு எல்லாமாகவும் இருந்த ஒரு நபரை சில தினங்களுக்கு முன் வெளிப்படையாக விலக்கிவிட்டதாக அறிவிப்பு கொடுத்த இந்த 'நிஜ நடிகர்', இப்போது இன்னொரு வேலையைச் செய்துள்ளார்.
அதாவது குறிப்பிட்ட அந்த நபர் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பாளராக இருந்தாரோ அவர்களிடமும் தனது செல்வாக்கை, 'நட்பை' பயன்படுத்தி குறிப்பிட்ட நபருக்கு பதில் 'நம்பர் ஒன் நோக்கியா' பார்ட்டியை நியமித்து வருகிறாராம்.
சமீபத்தில் அப்படி மாற்றியவர் பிரபல வாரிசு நடிகை!
நோக்கியா பார்ட்டியைப் பற்றி: இவர் கனெக்ஷன் கொடுப்பதில் மன்னனாம். இப்படி கனெக்ஷன் கொடுத்தே சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சொத்துக்களைக் குவித்துள்ளாராம்.
இப்போதும் நம் ஆச்சர்யம் இதுதான்... வருமான வரித்துறை என்ற ஒன்று இருப்பதே மாதச் சம்பளக்காரர்களிடம் வரி வசூலிக்கத்தானோ!


Click it and Unblock the Notifications











