எம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா!

By Staff

Manthra
'பணம் வேண்டுமா... என்னோடும் நண்பர்களோடும் சில இரவுகள் தங்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்..'

-நடிகை மந்த்ராவிடம் ஆந்திர எம்எல்ஏ ஒருவர் போட்ட இந்த படு பச்சையான டீல்தான் இப்போது டோலிவுட் முழுக்க பரபரப்புப் பேச்சாக உள்ளது.

தமிழில் மந்த்ரா என்ற பெயரில் சில படங்களில் நடித்து பின் தெலுங்கில் படு பிஸியான நடிகையாக இருந்தவர் ராசி. அருண் விஜய்யுடன் பிரியம், அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, பிரபுவுடன் தேடினேன் வந்தது, கார்த்திக்குடன் கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தவர் இவர்.

தொன்னூறுகளில் இவர் தெலுங்கின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார். தெலுங்கு காமிராமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து சொந்தப் படம் எடுத்தார். நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் அந்தப் படத்தில் போட்டார். கடனுக்கும் சிலரிடம் பணம் வாங்கியிருந்தார்.

ஆனால் அந்தபடம் தோல்வி அடைந்து மந்த்ராவை பெரும் கடனாளியாக்கியது. மேற்கொண்டு கதாநாயகியாக நடிக்க வயதும் உடலும் இடம் தரவில்லை.

மீண்டும் திரைப்படம் தயாரித்து விட்ட பணத்தைப் பிடித்துவிடலாம் என சிலர் ஆசைக் காட்டவே, தன்னிடமிருந்து இன்னொரு கதையைப் படமாக்க முயன்று, பணத்துக்காக அலைந்தார். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் பணம் தர முன்வரவில்லை.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் தரும் ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்க முடிவு செய்து, அவர் வீட்டுக்குப் போனாராம் மந்த்ரா.

பணம் தர உடனே ஒப்புக் கொண்ட எம்எல்ஏ, அதற்கு பிரதியுபகாரமாக, தன்னுடன் ஒரு வாரம் தங்க வேண்டும் என நிபந்தனை விதித்தாராம். அதோடு துபாயில் இருந்து வரும் தனது நண்பருடனும் சில இரவுகள் தங்க வேண்டும் என்றாராம். இதற்கு உடன்பட மறுத்த மந்த்ரா, தனது நெருங்கிய நண்பர்களிடம் இந்த அவலத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுள்ளாராம்.

இந்த சூழலில் படம் தயாரிக்கத்தான் வேண்டுமா... அல்லது கிடைக்கிற அக்கா, அம்மா அண்ணி வேடங்களில் நடித்து கடனை அடைக்கலாமா என யோசித்து வருகிறாராம் மந்த்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X