சிந்து மேனன் திடீர் திருமணம்?

பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்த அவர் பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவில்லை, மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே காதல் தோல்வியில் தற்கொலை வரை முயற்சி செய்ததாக சிந்து மேனன் குறித்து சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











