ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்?

By Chakra

Prabhu Deva and Nayanthara
ரம்லத்தை விவாகரத்து செய்ததே நயன்தாராவை திருமணம் செய்வதற்காகத்தான் என்பது ஊரறிந்த ரகசியம் என்பதால், புதிய திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர் பிரபு தேவாவும - நயன்தாராவும்.

நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார். ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத், ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்.

இதனால் வரும் ஜூன் மாதம் பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது.

இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X