போனி வர்மாவை கரம் பிடிக்கும் பிரகாஷ் ராஜ்!

தெலுங்குத் திரையுலகில் இதுகுறித்துத்தான் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். எப்போது கல்யாணம் என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் இந்த மறுமணம் இருக்கும் என்கிறார்கள்.
போனியுடன் காதல் மலர்ந்ததால்தான் லலிதா குமாரிக்கும், பிரகாஷ் ராஜுக்கும் இடையிலான காதல் கல்யாணம் முறிந்து விவாகரத்தில் போய் முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 3 வருடங்களாக போனியை தீவிரமாக காதலித்து வருகிறாராம் பிரகாஷ் ராஜ். இதை இருவரும் வெளிப்படையாக மறுத்து கூறி வருகின்றனர். இருப்பினும் தங்களது உறவை படு ரகசியமாக இருவரும் பேணிப் பாதுகாத்து வருகிறார்களாம்.
தற்போது கல்யாணம் செய்து கொள்ளும் முடிவுக்கு பிரகாஷ்ராஜ் வந்து விட்டாராம்.
கன்னடத்தில் நானு நன்ன கனசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரகாஷ்ராஜ். இதுதான் அவரது முதல் கன்னடப் படம்- இயக்கத்தில். இதை முடித்தவுடன் போனியை முறைப்படி கை பிடிக்கிறாராம் பிரகாஷ்.


Click it and Unblock the Notifications











