ஹைய்யா... கிசு கிசுன்னா ஜாலி! - ராணி முகர்ஜி

பிரபல இந்தி நடிகை ராணிமுகர்ஜி. இவரையும் இயக்குநர் / தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவையும் இணைத்து நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. இது பற்றி பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கிசுகிசுக்களை பார்த்து நடிகைகள் விரக்தியடையக் கூடாது. ஐஸ்வர்யா ராய் பற்றி ஆரம்பத்திலேயே எக்கச்சக்க கிசுகிசுக்கள் வந்தன. அவர் திருமணத்துக்கு பிறகும் கிசுகிசு பரப்பினர். அவர் பொறுமையாகவே இருக்கிறார்.
ஆனால் சிலர் இவைகளைப் படித்து மனம் உடைந்து போகிறார்கள். கப்பலே கவிழ்ந்து விட்டது போல அழுகிறார்கள். ஆனால் நான் வருத்தப்படுவதில்லை.
கிசுகிசுக்கள் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். பெரிய நடிகர்களோடு இணைத்து என்னைப்பற்றி வரும் செய்திகளை பார்த்து மகிழ்ச்சி அடைவேன். யாஷ் சோப்ரா மகன் ஆதித்ய சோப்ராவுடன் நட்பு என்றும் பிறகு அது காதலாக மலர்ந்தது என்றும் எழுதினார்கள்.
எனக்காகவே அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் என்றும் செய்தி வந்தது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. மகிழ்ச்சிதான். இப்படியும் ரசிகர்களை மகிழ வைக்க முடிகிறதே என்று நினைக்கையில் சந்தோஷப்படுகிறேன்.
இன்னொன்று என் தனிப்பட்ட உறவு பற்றி நான் வெளியில் பேசுவதில்லை. காரணம், நானும் என்னோடு தொடர்புடையவரும் தவிர மூன்றாவதாக ஒருவரும் பாதிக்கும் சூழல் உள்ளதால், இந்த உறவை ரகசியமாக வைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











