சுசீந்திரன் - விக்ரம் படம் நிறுத்தம்!
விக்ரமை வைத்து சுசீந்திரன் இயக்கவிருந்த புதிய படம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணங்கள் தெரியவில்லை.
விக்ரம் நடிக்கும் படம் ஆரம்பம் என்று செய்தி வரும்போதே, எப்போது ட்ராப் என்று செய்தி வரப் போகிறதோ என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை.
அதை மெய்ப்பிக்கும் வகையில் வந்திருக்கிறது, சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த படம் நிறுத்தப்பட்ட செய்தி.
காரணம்?
கதைதான். ஆரம்பத்தில் சுசீந்திரன் சொன்ன கதையை ஓகே செய்த விக்ரம், இப்போது, இன்னும் பெட்டரா இருந்தா நல்லாருக்கும் என்றதால், படப்பிடிப்புக்குக் கிளம்பத் தயாராக இருந்த சுசீந்திரன் பேனாவும் கையுமாக உட்கார்ந்துவிட்டாராம்.
இதுகுறித்து விசாரித்ததில், "படம் கைவிடப்படவில்லை. நல்ல கதை அமையும் வரை வேறு படத்தில் கவனம் செலுத்த விக்ரம் முடிவு செய்துள்ளார்" என்றனர்.


Click it and Unblock the Notifications











