போனி வர்மாவுடன் திருமணம் எப்போது? நேரம் வரும்போது-பிரகாஷ் ராஜ்

By Sudha

Prakash Raj with Pony Verma
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை லலிதகுமாரியை காதலித்து மணம் புரிந்தார். முன்னாள் நடிகர் ஆனந்தனின் மகள் தான் லலிதகுமாரி.

கடந்த 25.12.94-ல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். ஒரு குழந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனது. அன்மையில் இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர்.

பிரகாஷ்ராஜுக்கும் இந்தி பட டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவுக்கும் இடையிலான காதல்தான் இந்த விவாகரத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இரண்டாம் திருமணம் பற்றி பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,

திருமணம் என்பது யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கும் விஷயம் அல்ல. அது பற்றி பேசுவதற்கு உரிய நேரம் வரும்போது நான் தெரிவிக்கிறேன்.

நான் புதுமுக நடிகர்களை வைத்து, இனிது இனிது என்ற ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறேன். இந்த படம் ஹேப்பி டேஸ்' என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதன் இயக்குநர் குகன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 நகரங்களில் நடக்க உள்ளது. இந்த படம் நண்பர்களை பற்றிய படம். எனவே, நண்பர்கள் தினமான ஆகஸ்டு 1-ம் தேதி தான் விழாவை தொடங்குகிறோம். சென்னையில் சிட்டி சென்டர், ஸ்கை வாக் ஆகிய இடங்களில் ரசிகர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.

ஆகஸ்டு 2-ம் தேதி திருச்சியிலும், 3-ம் தேதி மதுரையிலும், 4-ம் தேதி கோவையிலும் நடக்கும் விழாவை கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கொண்டாட இருக்கிறோம்.

இந்த விழாக்களில் கலந்து கொள்ள நானும், இனிது இனிது படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தனி பஸ்சில், 4 நகரங்களுக்கும் செல்கிறோம்.

திரைப்படங்களில் நான் வில்லனாக நடிப்பதை ஒரு குறையாகவே நினைக்கவில்லை. ஏனெனில், நிஜ வாழ்க்கையில் நான் கதாநாயகன். கதாநாயகர்களுக்கு சமமான அந்தஸ்தும், பெயரும், புகழும் எனக்கு இருக்கிறது.

என் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான டூயட் மூவிஸ் அழகிய தீயே, மொழி, அபியும் நானும், இனிது இனிது போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளது. இனியும் கொடுக்கும் என்றார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X