வீட்டைவிட்டு ஓடிப்போய் உதவி ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை பூங்கொடி!
மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் மற்றும் மிளகா படங்களில் நடித்த நடிகை பூங்கொடி, மலையாள ஒளிப்பதிவாளர் வினுவை மணந்தார்.
மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வந்த பூங்கொடி, தமிழில் வீரமும் ஈரமும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ராசுமதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தருண் கோபி ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
பூங்கொடிக்கும் உதவி ஒளிப்பதிவாளர் வினு என்கிற வினோத்துக்கும் காதல் மலர்ந்தது. வினோத் மிளகா படத்தில் பணியாற்றியவர். திருப்பரங்குன்றத்தில் இதன் படப்பிடிப்பு நடந்த போது இருவரும் நெருக்கமானார்கள். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பூங்கொடி காதலில் உறுதியாக இருந்தார்.
வினோத்தைதான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக கூறினார். அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் பூங்கொடி வீட்டை விட்டு ஓடினார்.
வினோத்தும் பூங்கொடியும் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை என்ற இடத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார் பூங்கொடி.


Click it and Unblock the Notifications











