ஹைதராபாத் வேண்டாம்... சென்னைதான்! - திருமணத்துக்கு இடம் தேர்வு செய்த நயன்தாரா!

பிரபுதேவாவுக்கும் முதல் மனைவி ரம்லத்துக்கும் வரும் ஜூன் மாதன் பரஸ்பர விவாகரத்து கிடைக்கிறது.
விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே இந்தத் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒரு செல்லச் சண்டையே நடந்ததாம்.
இந்த சென்னையே வேண்டாம்... ஹைதராபாதில் வைத்துக் கொள்ளலாம் திருமணத்தை என பிரபுதேவா சொன்னாராம். ஆனால், ஒரு காலத்தில் தன்னால் சுதந்திரமாக வரமுடியாமல் (ரம்லத் மிரட்டலால்) போன இதே சென்னையில்தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம் நயன்தாரா.
அவரது ஆசைக்கு மதிப்பளித்து, தனது ஹைதராபாத் மோகத்தை விட்டுக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. ஹைதராபாதில் தனியாக திருமண வரவேற்பு நடத்த உள்ளனர்.
முகூர்த்தப்பட்டுக்கு காஞ்சிபுரத்தில் ஆர்டர் கொடுத்த கையோடு, தேவையான புதிய டிசைன் நகைகளுக்கு ஹைதராபாதில் பிரபல நிறுவனத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











