அடங்கி போகலைன்னா ஆயிரம் கோடிக்கு ஆப்பு… மாஸ் நடிகர் மண்டியிட்ட ரகசியம் இதுவா?

By Staff

சென்னை: மாஸ் நடிகர் எப்படி இருந்தாலும் தனது படத்தை சட்டப் போராட்டம் நடத்தியே ரிலீஸ் செஞ்சிருக்கேன் என உறுதியாக தொடர்ந்து போராடி வந்த நிலையில், கடைசியாக அவர் பல்டி அடித்து விட்டாரே என பலரும் கிண்டலும் கேலியுமாக பேச ஆரம்பித்துள்ளனர்.

அந்த கட்சிக்கு மறைமுக டீலிங் உடன் அடி பணிந்து விட்டாரா? என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், மாஸ் நடிகர் பிரச்னையை சுமூகமாக முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்க காரணமே தயாரிப்பு நிறுவனம் தான் என தகவல்கள் கசிந்துள்ளன.

A 1000-Crore Threat Forced the Mass Hero to Kneel Is That the Real Reason

ஆனால், அதிலும் மாஸ் நடிகருக்கு மிகப்பெரிய லாபம் இருப்பதை உணர்ந்து தான் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கைக்கும் அவர் செவி சாய்த்துள்ளார் என்கின்றனர்.

எவ்ளோ முட்டினாலும் திறக்காது: முட்டிப் பார்த்தால் கண்டிப்பாக தனக்கான கதவு திறந்து விடும் என்பதில் மாஸ் நடிகர் ரொம்பவே நம்பிக்கையாக இருந்த நிலையில், முட்டிப் பார்த்து விடலாம் என தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்த நம்பிக்கையின் பேரில், அவர்களும் முட்டும் வரை முட்டிப் பார்த்துள்ளனர். ஆனால், இது இன்னொரு பக்கம் ஈகோ கிளாஷ் ஆக மாறி நிற்க எவ்ளோ முட்டினாலும் இடியாப்ப சிக்கல் தான் ஆகுமே தவிர தீர்வு கிடையாது என்பது தெரிந்து விட்டது.

ஆயிரம் கோடிக்கு ஆப்பு: நடிகரும் இந்த விவகாரத்தை முற்றிலும் மறந்து விட்டு வேற வேலையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே போனால், நம்முடைய அடுத்த ஆயிரம் கோடி படத்துக்கும் பெரிய ஆப்பு வந்து விடும் என்பதை உணர்ந்துக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் நடிகரிடம் நேரடியாக சென்று பிரச்னையை முடித்து விடலாம் என்கிற முடிவை எடுத்துள்ளோம். இதில், உங்களுக்கு ஏதாவது பிரச்னையா எனக் கேட்டு தங்கள் தரப்பு விளக்கத்தையும் வைக்க நடிகர் அதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

நடிகருக்கும் லாபம் இருக்கு: ஒட்டுமொத்த பெண்களையும் தாய்மார்களையும் கவரும் விதமாகவே இந்த படம் இருக்கும் என்பதால் நடிகருக்கு அவரது ஆசையை மேலும் வலிமையாக்க இந்த படத்தின் ரிலீஸ் உதவும் என்பதால் மேலும், தாமதிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் என்கின்றனர். சுமூகமாக சென்றால் தான் அடுத்த படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து டபுள் லாபத்தை சம்பாதிக்க முடியும் என்பதால் தான் தயாரிப்பு நிறுவனமும் மாஸ் நடிகரும் அடங்கிப் போய்விட்டார்கள் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X