ஓவராக குடிக்கிறார்.. கதறிக் கதறி அழுகிறார்.. மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பிரபல நடிகை!
மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட நடிகை ஒருவர், தனது நிலையை எண்ணி சதா அழுது கொண்டே இருக்கிறாராம்.
Recommended Video
சென்னை: பிரபல நடிகை ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் அந்த நடிகை. இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட். இதனால் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் நான்கைந்து படங்களில் நடித்தார்.

போட்டி போட்ட ஹீரோக்கள்
டாப் ஹீரோக்கள் எல்லாம் போட்டி போட்டு தங்கள் படங்களில் அந்த நடிகையை நடிக்க வைத்தனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.

திருமணம் செய்துகொண்டார்
பீக்கில் இருந்த போதே தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர். நடிப்புக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்தார். இல்லற வாழ்க்கையில் செட்டிலானார்.

சீக்கிரமே விவாகரத்து
ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. நடிகைக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கணவரை விவாகரத்து செய்தார்.

தப்பு கணக்கு
விவாகரத்து ஆகிவிட்டதால் தனக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வரும் என நடிகை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவரது கணக்கு தப்பு கணக்காகிவிட்டது.

படங்கள் ஓடவில்லை
நடிகைக்கு ஹீரோயின் வாய்ப்பு எதுவும் அமையவில்லை. ஹீரோவாக நடித்து வந்த சில குணச்சித்திர நடிகர்கள், தங்களுக்கு ஜோடியாக நடிகையை நடிக்க வைத்தனர். அந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.

மதுவுக்கு அடிமை
தமிழ், மலையாளம், தெலுங்கு என கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார் அந்த நடிகை. டாப் ஹீரோயினாக இருந்த தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என தனது நிலையை நினைத்து கவலைப்படும் நடிகை குடி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்.

குடித்துக்கொண்டே இருக்கிறார்
இப்போது எல்லாம் படப்பிடிப்புக்கு கூட சரியாக போகாமல் சதா குடித்துக்கொண்டே இருக்கிறாராம் அவர். குடிக்கும் போதெல்லாம் தனது நிலையை எண்ணி, கதறி கதறி அழுகிறாராம். இதை பார்த்து அவரது உதவியாளர்கள் வேதனைப்படுகிறார்கள்.

உதவ முடியுமா?
நடிகையை எப்படியாவது இதில் இருந்து மீண்டெடுக்க வேண்டும் என முக்கிய நடிகர்கள் சிலரிடம் அவரது நலம் விரும்பிகள் சிலர் உதவிக்கேட்டிருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் மட்டும், உதவுவதாக சொல்லியிருக்கிறார்களாம்.

நடிகைகளின் நிலைமை
சினிமாவை பொறுத்த வரை நடிகைகளின் ஆயுட்காலம் என்பது மிகவும் குறைவானது. உச்சத்தில் இருக்கும் போதே செட்டிலானால் தான் உண்டு. இல்லை என்றால் இப்படி தான் நிலை தடுமாறி விழ வேண்டியிருக்கும் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications