ஏன்தான் அந்த படத்துல நடிச்சனோ.. வர வாய்ப்பெல்லாம் போயிடுதே.. புலம்பும் நடிகை!
Recommended Video
சென்னை: தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு வரும் வாய்பெல்லாம் தவறி போவதால் பெரும் வேதனையில் உள்ளாராம்.
பறவை படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற அந்த நடிகை தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் பலருடனும் ஜோடி போட்டார். இயக்குநர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் நடிகை ரொம்ப ஃபிரியாக இருக்க ஆசைப்பட்டதால் கணவர் வீட்டாருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் இது சரிப்பட்டு வராது என எண்ணிய நடிகை, கணவரை பிரிய முடிவு செய்தார்.

பரஸ்பரம் பிரிவு
இதனை தொடர்ந்து நடிகையும் இயக்குநரும் சட்டப்படி விவாகரத்து செய்து பரஸ்பரம் பிரிந்தனர். தொடர்ந்து தன்பாட்டுக்கு நடித்து வந்தார் நடிகை.

பாராட்டு
தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் நடிக்காத கேரக்டரில் நடித்து வாங்கிக்கட்டிக்கொண்டார். நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டினர்.

யோகா, சுற்றுலா
எந்த காரணத்திற்காக நடிகையின் துணிச்சல் பாராட்டப்பட்டதோ அதே காரணத்திற்காக, அந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் ஏற்கனவே கமிட்டான படங்களில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இதனால் வருத்தத்தில் இருந்த நடிகை யோகா, சுற்றுலா என மனதை தேற்றி வருகிறார்.

கை நழுவி விட்டது
வேதனையில் இருந்த அவருக்கு, அமைதியான இயக்குநரின் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பும் தற்போது கை நழுவி போய்விட்டதாம்.

நடிகை வேதனை
அந்த படத்தில் நடித்த பிறகுதான் பட வாய்ப்புகள் எல்லாம் பறிபோகிறது, அதன் பிறகுதான், முன்னாள் கணவருக்கு இரண்டாவது திருமணம் என வாழ்க்கையில் எவ்வளவு வேகமாய் உயர்ந்தோமோ அவ்வளவு வேகமாய் இறங்குகிறோம் என வேதனையில் உள்ளாராம் நடிகை.

நடிகையின் புலம்பல்
மேலும் அந்த படத்தில் ஏன் நடித்தனோ தெரியவில்லை என்றும் புலம்பி வருகிறாராம் நடிகை. நடிகையின் புலம்பலை பார்த்த அவருக்கு நெருக்கமான வட்டாரம், யாருக்கும் தொல்லை கொடுக்காத நடிகை, அவசரப்பட்டு எடுத்த முடிவால் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டாரே என ச்சு கொட்டி வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











