கண்டுகொள்ளாமல் விட்ட படக்குழு... கோபத்தில் விழா பாதியில் வெளியேறிய ஹீரோயின்
சென்னை: பாடல் வெளியீட்டு விழாவில் கண்டுகொள்ளாததால் ஹீரோயின் திடீரென்று வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹீரோவாக நடித்து வருகிறார், அந்த இசை அமைப்பாளர். அவர் நடிக்கும் படத்துக்கு இசை மேதை மியூசிக் அமைத்திருக்கிறார்.
முன்னாள் பத்திரிகையாளர் இயக்கி இருக்கும் அந்தப் படத்தில் மலையாள ஹீரோ ஒருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் போன மாதமே முடிந்துவிட்டது.

அரசியல் பிரமுகர்கள்
இதன் பாடலை நேற்று வெளியிட்டார்கள். விழாவுக்கு அரசியல் பிரமுகர்கள் வந்திருந்ததால் தயாரிப்பாளர், அவர்களை கவனிப்பதிலேயே குறியாக இருந்தார்.

பாராட்டு
விழாவில் பேசியவர்களில், இயக்குனர் உட்பட சிலர், அரசியல்வாதிகளை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இசை மேதையையும் இமயத்தையுமே பாராட்டிப் பேசினார்கள்.

ரம்மியமான நாயகி
இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் படத்தின் நாயகி. இதற்காகவே கேரளாவில் இருந்து அவசரம் அவசரமாக வந்தாராம் இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருக்கும் அந்த
ரம்மியமான ஹீரோயின்.

மேடைக்கு
கூட்டத்தினரோடு அமர்ந்திருந்த அவரை, விழா தொடங்கிய பின், திடீரென ஞாபகம் வந்தவர்களாக அழைத்தனர் மேடைக்கு. அதுவும் இயக்குனர் ஞாபகப்படுத்திய பிறகு.

கோபமாக எழுந்து
பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகை, ஏன்டா வந்தோம் என்று, திடீரென கோபமாக எழுந்து சென்று விட்டாராம் வெளியே.


Click it and Unblock the Notifications











