மீண்டும் இயக்குநருக்கும் டாப் நடிகருக்கும் மோதல்.. அடுத்த ஷெட்யூல் லேட்டாக இதுதான் காரணமா?
சென்னை: ஒரு பக்கம் தயாரிப்பாளரிடமும் மறுபக்கம் அந்த டாப் நடிகரிடமும் சிக்கித் தவித்து வருகிறாராம் அந்த சந்தோஷமான இயக்குநர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே சந்தோஷமே இல்லாமல் இயக்குநர் இருந்து வருகிறார் என்று தான் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்தளவுக்கு ஸ்க்ரிப்ட்டில் தொடங்கி அனைத்திலும் நடிகரின் தலையீடு அதிகமாகவே உள்ளதால் அப்செட் ஆகி இருக்கிறாராம் இயக்குநர்.
இந்த படத்தையே எடுக்க ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு அவரது நிலைமை ரொம்பவே பரிதாபத்திற்குரிய இடத்துக்கு சென்று விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ஏகப்பட்ட பஞ்சாயத்து: ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தை செதுக்குகிறேன். நான் செதுக்குவதில் ரொம்ப எக்ஸ்பர்ட் என நினைத்துக் கொண்டு அந்த நடிகர் அதிகமாகவே தலையிட்டது இயக்குநருக்கு பிடிக்கவில்லை என்கின்றனர். எந்தவொரு இயக்குநராக இருந்தாலும் அந்த வருத்தம் இருந்தாலும், படத்தின் நல்லதுக்காக என எண்ணும் போது எல்லாவற்றும் சரி சொல்லித்தான் இயக்க ஆரம்பிப்பார்கள். ஆனால், இயக்குநர் அழைத்து வரும் ஆட்களை எல்லாம் இது சரி அல்ல, அது சரி அல்ல என குறை சொல்லி கழட்டி விடும் வேலையை அந்த நடிகர் பார்த்தது இயக்குநருக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.
சூட்டிங் நிறுத்தம்: இன்னொரு பக்கம் இயக்குநரை தயாரிப்பாளர் எப்போதான் படத்தை முடிப்பீங்க இஷ்டத்துக்கு செலவு ஒரு பக்கம் ஆகிட்டே இருக்கு என டார்ச்சர் பண்ணத் தொடங்கி விட்டாராம். நடிகர் செய்றதை எல்லாம் அங்கே சொன்னால் வேற சிக்கலுக்கு கொண்டு வந்து விடும் என தெரிந்துக் கொண்டு இரு பக்கமும் அந்த இயக்குநர் அடிவாங்கி வரும் நிலை தான் ஏற்பட்டு வந்தது என்றும் சமீபத்தில் கடுப்பாகி இயக்குநர் நடிகரிடம் பேசியது தான் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட காரணம் என்கின்றனர்.
பேச்சுவார்த்தை: இயக்குநரையும் நடிகரையும் சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். இவர்கள் சண்டையை பார்த்து இந்த படம் இப்போதைக்கு வராது என நினைத்த நடிகை அப்படியே இன்னொரு பிரபல நடிகர் படத்துக்கு போறேன் என டாட்டா காட்டி விட்டு சென்று விட்டாராம். கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துக் கொண்டே இருந்தால் அவரும் என்ன செய்வார் பாவம் என்கின்றனர். சம்மருக்கு படம் வந்து விடும் என சீன் போட்டது எல்லாம் அவ்வளவு தானா? என பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், விரைவில் படத்தை நல்லபடியாக முடித்து வெளியிடும் முயற்சியில் இயக்குநர் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











