வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு 40 வயதில் திருமணம் செய்யும் நடிகை.. கடுப்பில் பெரிய குடும்பம்!

சென்னை: பெரிய இடத்து பெண்ணான மூத்த நடிகை 40 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருப்பது அவரது குடும்பத்தினரை கடுப்பாக்கியிருக்கிறதாம்.

சினிமாவில் பெரிய குடும்பம் என்ற அந்தஸ்தில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் அந்த நடிகை. குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என அனைவரும் சினிமாவுடன் தொடர்பு உடையவர்கள்.

நடிகையும் குழந்தையாக இருந்தது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். படங்கள் எதுவும் ஹிட்டாகாததால் கல்யாணம் கட்டிக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

அக்கட தேசம்

அக்கட தேசம்

மகன், மகள் என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கணவரை விவாகரத்து செய்த நடிகை, அடுத்த திருமணத்திற்கு தயாரானார். இரண்டாவதாக அக்கட தேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

டான்ஸருடன் காதல்

டான்ஸருடன் காதல்

அங்கும் ஒரு குழந்தையை பெற்ற நடிகை அவரையும் விவாகரத்து செய்தார். பின்னர் முதல் கணவருக்கு பிறந்த மகன் அப்பாவோடு செல்ல இரண்டு பெண் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு காலத்தை கழித்து வந்தார். பின்னர் மீண்டும் நடிகைக்கு திருமண ஆசை வர, நடன இயக்குநர் ஒருவரை காதலித்தார்.

100 நாள் நிகழ்ச்சி

100 நாள் நிகழ்ச்சி

அந்த காதலும் பிரேக்கப் ஆனது. அந்த நடன இயக்குநருடன் நடிகை சுற்றியதே அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என அப்போதே தகவல் பரவியது. தொடர்ந்து டிவி சேனலின் 100 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

ஏற்க மறுத்த குடும்பம்

ஏற்க மறுத்த குடும்பம்

நடிகையின் செயலால் கடுப்பான மக்கள் அவரது பெற்றோரையும் குடும்பத்தினரையும் விளாசினர். நிகழ்ச்சியின் போதே நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு ரூட்டு போட்டார். ஆனால் எல்லாம் பிளாப்பானது. நடிகை எவ்வளவோ கெஞ்சியும் அவரை ஏற்க குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.

40 வயதில் திருமணம்

40 வயதில் திருமணம்

சொத்துதான் முக்கியம் என குடும்பத்தினரை கோர்ட் வரை இழுத்த நடிகையோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என இருந்து வருகின்றனர். இந்நிலையில் 40 வயதான நடிகை மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இதுதொடர்பாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தோளுக்கு உயர்ந்த மகன்

தோளுக்கு உயர்ந்த மகன்

ஏற்கனவே அவர் மீது செம கடுப்பில் உள்ள குடும்பத்தினர் நடிகையின் மூன்றாவது திருமணத்தால் இன்னும் காண்டாகி இருக்கிறார்களாம். தோளுக்கு உயர்ந்த மகன், வயதுக்கு வந்த மகள் என உள்ள நிலையில் நடிகையின் இந்த திருமண ஆசையை கேட்டு கொதித்து போயுள்ளார்களாம்.

புலம்புகிறார்களாம்

புலம்புகிறார்களாம்

நடிகையுடன் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் இப்படி காதல் கல்யாணம் என சுற்றுவது அவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். இந்த வயதில் ஏன் இப்படி மானத்தை வாங்குவதை போல சுற்றிக் கொண்டிருக்கிறார் என நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X