அந்த வீட்டுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பெரியகுடும்பத்து நடிகைக்கு நிக்க கூட நேரமில்லையாம்!
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சினிமாவில் பெரிய குடும்பத்தை சேர்ந்த நடிகைக்கு வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கிறதாம்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். வீட்டுக்குள் ஒரே குடும்பமாக இருந்த அவர்கள், சண்டை, சச்சரவு, முட்டல், மோதல், கலகம், காதல் என கொண்டாடி வந்தனர்.
இதில் மக்களின் பொறுமையை சோதித்த பலர் பாதியிலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கன்டென்ட் கொடுத்தவர்கள் மட்டும் கடைசி வரை நீடித்தனர்.

திட்டிய மக்கள்
ஆனாலும் இந்த நிகழ்ச்சி நேர்மையாக நடைபெறவில்லை என குற்றம்சாட்டிய மக்கள், தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். குறிப்பாக வீட்டில் பற்ற வைப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருந்த பெரிய குடும்பத்து நடிகையை படு மோசமாக திட்டி தீர்த்தனர்.

கோரிக்கை
கோபத்தில் அவருக்கு பல செல்லப் பெயர்களை வைத்த மக்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து வெளியேற்றப்பட்டார் அந்த நடிகை.

நியாயமே இல்லை
அவர் வெளியேற்றப்பட்டதால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்து படுத்தேவிட்டது. இதனால் மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வரப்பட்ட அந்த நடிகை தனது வேலையை காட்ட ஆரம்பித்தார்.
கடைசியில் நிகழ்ச்சியில் நியாய தர்மமே இல்லை என புலம்பிய அவர், வாண்ட்டாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

டிவி சேனல்கள்
ஒரு வழியாக வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகள் வரிசைக்கட்டி நிற்கிறதாம். சீரியலுக்கு பெயர் போன சேனலில் தலைக்காட்டிய அவர் நடிகையாக அதகளப்படுத்தினார். அதனை தொடர்ந்து தனக்கு கெட்டப்பெயரை சம்பாதித்து கொடுத்தாலும் தனக்கும் மக்களுக்கும் இடையில் மீண்டும் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த சேனலிலேயே மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டாராம்.

அதிர்ஷ்டம்
அப்பா, அண்ணன், தங்கைகள், என பல உறவுகள் இருந்தாலும் குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த நடிகைக்கு முதலாளி நிகழ்ச்சி பல உறவுகளை கொடுத்ததோடு வருமானத்துக்கும் வழி செய்திருக்கிறது. முந்தைய சீசன்களில் பங்கேற்ற நடிகைகள் எல்லாம் விதவிதமாக போட்டோ போட்டு வாய்ப்புக்கு காத்திருக்கும் நிலையில் பற்ற வைத்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூறையை பிய்த்து கொண்டு கொட்டுகிறதே என கிசு கிசுக்கிறது கோடம்பாக்கம்.


Click it and Unblock the Notifications











