முறைத்த ஹீரோ.. கடும் அப்செட்டில் பிரம்மாண்டம்.. விநியோகஸ்தர் எல்லாம் தெறித்து ஓடுறாங்க?

By Staff

சென்னை: அந்த பிரம்மாண்டம் பல ஆண்டுகளாக உருட்டியதெல்லாம் வீணாக போகும் அளவுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அந்த நடிகருக்காக லோக்கல் ஏரியாவில் படம் ஓடி விடும் என்றாலும், பான் இந்தியா மார்க்கெட்டை அந்த இயக்குநர் காலி செய்து விடுவார் போல இருக்கே என கடுப்பாகி விட்டதாக கூறுகின்றனர்.

இயக்குநரின் சொந்த ஊரிலேயே அவரது படம் பெரிதாக சேல் ஆவதே கேள்விக்குறியாக உள்ளதாம். ஆனால், அதை விட இயக்குநர் மீது அந்த நடிகர் கோபம் கொள்ள காரணமே இன்னொரு விஷயம் தான் எனக் கூறுகின்றனர்.

A big rift between Popular Director and Star Hero shocks industry


ரொம்ப லேட்: காவியப் படைப்பை படைக்கிறேன் என கலர் கலராக ரீல் விட்டதை தவிர இயக்குநர் புதிதாக பிரம்மாண்டமாக எதுவுமே பண்ணாத நிலையில், நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். ஆரம்பத்தில் அடுத்தும் பிரம்மாண்ட படம் என நினைத்து ரொம்பவே நம்பி தனது கால்ஷீட்டுகளையும் எல்லாம் அந்த இயக்குநருக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், அதை கொஞ்சம் கூட புரிந்துக் கொள்ளாமல் இயக்குநர் வீணடித்து விட்டார் என்கின்றனர்.

ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்: முழு மூச்சாக ஒரு பெரிய படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என நினைக்காமல் தனது உதவி இயக்குநர்களை எல்லாம் வைத்து ஆளுக்கு ஒரு விதமாக படத்தை எடுத்துக் கொண்டு இருந்த இயக்குநர் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்தது போல இன்னொரு படத்தில் அதிக ஆர்வத்தை செலுத்தியது நடிகருக்கு ஆத்திரத்தை வரவழைத்து விட்டது என்கின்றனர்.

விநியோகஸ்தர்கள் ஓடுறாங்க: நடிகருக்காக சொந்த ஊரில் விநியோகஸ்தர்கள் எல்லாம் படத்தை வாங்க சம்மதித்தாலும், வெளியூர் விநியோகஸ்தர்கள் எல்லாம் இதெல்லாம் வியாபாரம் ஆகாது பாஸ் என மூஞ்சிக்கு நேராகவே சொல்லி தெறித்து ஓடுறாங்களாம். இந்தி பெல்ட்டில் பெரிதாக விற்பனை நடைபெறாமல் போனது தான் ஹீரோவை கோபத்தில் ஆழ்த்தி விட்டதாக கூறுகின்றனர்.

அப்செட்டான இயக்குநர்: இயக்குநரை ஒரு கட்டத்தில் ஹீரோ முறைத்தே விட்டார் என்று பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. படம் வெளியானதும் நிச்சயம் பெரியளவில் ஓடும் என்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் வெளியானால் பிசினஸ் சூடு பிடிக்கும் என தயாரிப்பாளர்கள் எல்லாம் இயக்குநருக்காக ஹீரோவிடம் பேசி சமாளித்துள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X