லவ் டார்ச்சர்.. பல நடிகர்களுடன் ரகசிய உறவு..குண்டை தூக்கிப்போட்ட நடிகை!
சென்னை: அழகான க்யூட் நடிகையான இவர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நான் பள்ளி படிக்கும் போதே ஒருவருடன் உறவில் இருந்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். தற்போது அவர் அளித்துள்ள அந்த பேட்டி சோஷியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து, அவரது ரசிகர் மட்டுமில்லாமல் பலரும் அந்த நடிகையை இணையத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள இந்த அழகு நடிகை, சட்டப்படிப்பை முடித்துள்ளார். சினிமாவில் இருந்த ஆர்வத்தால் நடிக்க வந்த இவர், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு படங்களிலேயே நடித்துள்ளார். சின்ன சின்ன வேடத்தில் நடித்து வந்த இவர், தமிழில் அறிமுகமானதே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக இருந்தது. பல முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் அந்த கேரக்டரில் அசால்டாக நடித்திருந்தார். அந்த படம், இந்த க்யூட் நடிகைக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுத்தந்தது மட்டுமில்லாமல், பல விருதையும் பெற்றுத்தந்தது.

அந்த படத்தை தொடர்ந்து, இவருக்கு தமிழில் படவாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு படவாய்ப்பு அமையாததால், மலையாள தேசத்திற்கு சென்றார். அங்கு ஒரு சில படங்களில் நடித்த இவர், ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், நடுவராக இருந்துள்ளார். தற்போது, இவர் தமிழில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதல் கதை: இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து மனம் திறந்து பேசினார். அதில், நான் பல பேருடன் உறவில் இருந்து இருக்கிறேன். இதை வெளியில் சொல்லுவதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை என்றார். மேலும், நான் பள்ளியில் படிக்கும் போதே சைட் அடிப்பேன். சைட் அடிப்பதற்காகவே அந்த ஏரியாவுக்கு சென்று பிஸ்கட், சாக்லேட் வாங்கி சாப்பிடுவேன். அப்போது, ஒரு பையனோடு லவ் வந்துச்சு. ஆனால், அந்த காதல் ரெண்டு மாதத்திலேயே பிரேக்கப் ஆயிடுச்சு.
பல பேருடன் உறவு: அதன்பின் நிறைய பேரை காதலித்து இருக்கிறேன். அந்த காதலும் பிரேக்கப் ஆகிவிட்டது. பல பேருடன் ரிலேஷன்ஷிப் இருந்தது. அந்த உறவு எல்லாம் பிரிந்து போக காரணமே, சரியான புரிதல் இல்லாதது தான். நான் சிலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது, காதல் என்று சொல்லி ஒரே டார்ச்சர் செய்வாங்க, அது போல நானும் சிலரை டார்ச்சர் செய்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் அந்த டார்ச்சர் வெறுப்பாக இருவரும் பிரிந்துவிட்டோம். காதலில் முக்கியமானதே யாரும் யாரையும் டார்ச்சர் பண்ண கூடாது. ஒருத்தர பிடிக்கலைனா அவங்கள விட்டு விலகி போயிறணும் அது தான் காதலுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று காதலுக்கு புது விளக்கத்தையே கொடுத்துள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஓகே தான், பல பேருடன் உறவில் இருந்தேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று அந்த நடிகையை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











