இசையமைப்பாளர் வலையில் சிக்கிய பாடகி.. மனுஷனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

By Staff

சென்னை: டாப் இசையமைப்பாளராக சினிமாவில் மாஸ் காட்டி வரும் மியூசிக் டைரக்டரின் வலையில் பிரபல பாடகி ஒருவர் சிக்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

A cute singer who is in love with a famous music composer

இசையின் மீது இருந்த ஆர்வத்தால், கச்சேரிகளில் பாடி வந்த இவர், முன்னணி நடிகரின் ஒருவரின் படத்திற்கு இசையமைத்து மியூசிக் டைரக்டர் என்ற இடத்தை பெற்றார்.

திறமையான இசையமைப்பாளர்: முதல் படத்தில் தனது மொத்த திறமையை கொட்டி இவர் இசையமைத்த பாடல் இவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இதையடுத்து, பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசை அமைத்து, சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடித்தார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் என எதுவாக இருந்தாலும் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி கிழி தான்.

ஒல்லி நடிகையுடன் காதல்: இவர் எந்த அளவிற்கு வளர்ந்தோரோ அதைவிட அதிகமாக இவர் மீது சர்ச்சைகளும் குவிந்தன. அழகான குயிட்டான ஒல்லி நடிகையை காதலித்த நிலையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. தன்னை விட வயதில் மூத்த நடிகையை காதலித்ததால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர். காதல் ஜோடியாக சுற்றித்திரிந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

பாடகியுடன் டேட்டிங்: இதையடுத்து, வாரிசு நடிகை ஒருவரை காதலித்து வருவதாக செய்தி பரவியது. ஆனால், வாரிசு நடிகையின் பெற்றோரோ தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதையடுத்து, செல்லமான பாடகி ஒருவர் இசையமைப்பாளர் காதலித்து வருவதாக கிசுகிசு கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரவி வருகிறது.

செல்லமான பாடகியின் குரல் பிடித்துப்போனதால், டேட்டிங் அழைத்து சென்று பாட்டு பாட சொல்லி கேட்டு மகிழ்ந்து வருகிறாராம் அந்த இசையமைப்பாளர். இப்படியே போனால் பெயர் கெட்டுவிடும் என்று இசையமைப்பாளரின் பெற்றோர் திருமணத்தை விரைவில் பேசி முடிக்க திட்டம்போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X