புலம்பி புலம்பியே காரியம் சாதித்த இயக்குநர்
சென்னை: இயக்குநர் ஒருவர் பார்ப்பவர்களிடம் புலம்பி, புலம்பியே காரியம் சாதித்துள்ளார்.
நான் ஆளாக்கிய பையன் இன்று என் படத்தில் நடிக்க மாட்டேன் என்கிறார் என இயக்குநர் ஒருவர் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார். அந்த நடிகரிடம் சென்று பலமுறை கால்ஷீட் கேட்டும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இயக்குநர் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலை பார்த்தவர்கள் நடிகரை பற்றி தவறாக பேசத் துவங்கினர். நன்றி கெட்டவராக இருக்கிறாரே நடிகர் என்று விமர்சனம் எழுந்தது.
விட்டால், இந்த இயக்குநர் நம் இமேஜை டேமேஜ் செய்துவிடுவார் என்று நினைத்தாரோ என்னவோ அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர். பெரிய ஆளுய்யா, புலம்பியே பெரிய ஹீரோவின் கால்ஷீட்டை வாங்கிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
இயக்குநர் ஒன்றும் லேசுபட்டவர் இல்லை. திறமையானவர் தான். அவர் இயக்கத்தில் நடிப்பது அந்த நடிகரின் இமேஜை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











