அந்த இயக்குனரை கண்டாலே ஆளுக்கொரு பக்கம் ஓடும் ஹீரோக்கள்
சென்னை: கதையே இல்லாமல் படம் எடுக்கும் நடிகர்-இயக்குனரை பார்த்தாலே ஹீரோக்கள் ஓடுகிறார்களாம்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றால் வித்தியாசமான பரிசளிக்கும் அந்த நடிகர்-இயக்குனர் கதையே இல்லாமல் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் அவர் பல ஹீரோ, ஹீரோயின்களை நடிக்க வைத்து வருகிறாராம்.
இந்த படத்திற்காக அவர் தன் பார்க்கும் ஹீரோக்களிடம் எல்லாம் என் படத்தில் நடித்துக் கொடுங்களேன். உங்கள் நடிப்புக்கு சம்பளம் எல்லாம் கிடையாது நம் நட்புக்காக நடிக்கலாமே என்கிறாராம். உங்களை பற்றி நான் மேடையில் எப்படி புகழ்ந்து பேசி இருக்கிறேன். நீங்கள் என் படத்தில் நடிக்கக் கூடாதா என்கிறாராம்.
இவர் கதையே இல்லாம படம் எடுக்க நாம தான் கிடைச்சோமா என்று ஹீரோக்கள் அலுத்துக் கொள்கிறார்களாம். மேலும் அந்த நடிகர்-இயக்குனர் கண்ணில் படக்கூடாது என்பதில் ஹீரோக்கள் உறுதியாக உள்ளார்களாம். இது தவிர தங்கள் படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு அந்த நடிகர்-இயக்குனரை அழைக்காதீர்கள், அவர் பாட்டுக்கு பேசி கை தட்டு வாங்கிக் கொண்டு பலரின் மனதை புண்புடுத்துகிறார் என்று ஹீரோக்கள் கூறுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











