வாய்ப்பு கேட்ட நடிகையை அதிர வைத்த இயக்குனர்
சென்னை: பாலிவுட்டில் செட்டிலான அந்த மூன்று எழுத்து நடிகை வாய்ப்பு கேட்டு கோலிவுட் இயக்குனருக்கு போன் செய்து அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.
கோலிவுட்டில் ஓஹோவென இருந்தவர் அந்த 3 எழுத்து நடிகை. இந்நிலையில் தான் ஒரு நாள் கன் இயக்குனர் அவரை பாலிவுட் அழைத்துச் சென்றார். தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கான அந்த படம் ஹிட்டாக அம்மணி கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு பாலிவுட்டில் செட்டில் ஆனார்.
அவர் பாலிவுட் சென்றதில் தவறு இல்லை. ஆனால் மும்பையில் தென்னிந்திய நடிகைககளை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வது கொஞ்சம் ஓவர் தான். பாலிவுட் சென்றவர் ஏற்கனவே இருந்த ஒல்லியான உடம்மை மேலும் ஒல்லியாக்கினார். பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் நான் தான் என்று மைக் செட் வைக்காத குறையாக அவர் கூறுவதை பாவம் யாருமே கேட்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக படம் இல்லாமல் இருந்த அவருக்கு தற்போது தான் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனியும் மும்பையில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அவர் கோலிவுட் இயக்குனர் ஒருவருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டுள்ளார். அதற்கு அந்த இயக்குனரோ அண்ணி கதாபாத்திரத்தில் வேண்டுமானால் நடியுங்கள் என்று கூற நடிகை ஆடிப் போய்விட்டாராம்.


Click it and Unblock the Notifications










