படத்தை முடித்தும் உடனே ரிலீஸ் பண்ண முடியலையே: குமுறும் இயக்குனர்
சென்னை: ரம்ஜான் ஸ்பெஷல் உணவு படத்தின் இயக்குனர் குமுறிக் கொண்டிருக்கிறாராம்.
ரம்ஜான் ஸ்பெஷல் உணவு பெயரில் சிறுத்தையை வைத்து படம் எடுத்துள்ளார் அந்த இயக்குனர். படம் இந்த மாதம் ரிலீஸாகவிருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சிறுத்தையை வைத்து தான் தயாரித்துள்ள ஹேன்ட்சம் கிங் படம் தீபாவளிக்கு வரும் என்று அறிவித்துவிட்டார்.
இதனால் உணவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து இயக்குனர் குமுறிக் கொண்டிருக்கிறாராம். நாம் தான் படத்தை முதலில் துவங்கினோம். பாடல்களையும் முதலில் வெளியிட்டோம் ஆனால் ரிலீஸில் மட்டும் நமக்கு முதலிடம் இல்லையே என்று ஆதங்கப்படுகிறாராம்.
இரண்டு படங்களுக்கும் ஒரே தயாரிப்பாளர் என்பதால் தான் உணவு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது என்று கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications