எல்லாம் படத்துல மட்டும்தானா.. பணத்துக்காகதானா.. உச்ச நடிகை மீது செம கோபத்தில் கோலிவுட்!
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நடிகை வாயே திறக்கவில்லை என கோபத்தில் இருக்கிறார்களாம் கோலிவுட்டை சேர்ந்தவர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே 2 வயதான ஆண் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 4 நாட்கள் மீட்பு பணிகளுக்கு பிறகு குழந்தை சடலமாக மீட்கப்பட்டான்.
குழந்தையை உயிருடன் மீட்க தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் இரவு பகலாய் அங்கேயே முகாமிட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இரங்கல்
ஆனால் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என டிவிட்டிய திரை பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

படத்தால் உயர்வு
ஆனால் தனது படம் ஒன்றில் இந்த சம்பவத்தை அழுத்தமாக சொன்ன உச்ச நடிகை ஒருவர் இதுகுறித்து வாயே திறக்கவில்லையாம். அந்த படத்தால் தனது மார்க்கெட்டும் மதிப்பும் உயர்ந்தது.

பேசவில்லை
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் கண்முன்னே நடந்த போதும் கூட நடிகை அதுகுறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லையாம். படத்தில் நடக்கும் காட்சிகளை பார்த்து துடிப்பதுபோல் நடித்தவருக்கு நிஜத்தில் பார்க்கும் போது ஒரு வார்த்தை கூட பேச வரவில்லையா என கடுப்பில் உள்ளதாம் கோலிவுட்.

எதிர்பார்க்ககூடாது
பணத்திற்காகதான் நடிகை நடித்திருக்கிறார். அவரிடம் நிஜத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் வேஸ்ட் என்கின்றனராம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள். பேமென்ட் டிலேவால் உச்ச நடிகர் படத்தையே டீலில் விட்டவர் இல்லையா என முகத்தை சுளிக்கிறார்களாம் கோலிவுட்காரார்கள்.


Click it and Unblock the Notifications











