அம்மாஞ்சி மாதிரி இருந்துக்கிட்டு இந்த நடிகை பண்ற வேலைய பாத்தீங்களா.. அவருக்கு ரூட்டு விடுகிறாராம்!
சென்னை: அப்பாவி கேரக்டர்களில் நடித்து வரும் அந்த பிரபல நடிகை நடன நடிகருக்கு ரூட்டு விட்டு வருவதாக றெக்கை கட்டி பறக்கிறது.
வளர்ந்தவரான அந்த தகப்பன் நடிகர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் எக்குத்தப்பானவர். நடனம், நடிப்பு, இயக்கம் என மனுஷர் பிஸியாக இருந்தாலும் நடிகைகளை மடக்குவது இவருக்கு ஜுஜுபி மேட்டர்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு உச்ச நடிகையுடன் காதலில் லயித்திருந்தார் நடிகர். ஏற்கனவே காதல் தோல்வியால் நொந்து போயிருந்த அந்த நடிகை, நடிகரை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று கணக்கு போட்டார்.

பிரியாவிடை
இதற்காக கணக்கில்லாமல் நடிகருக்காக பல கோடிகளை இழந்தார். சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தார் நடிகை. கண்ணீர்மல்க சினிமாவுக்கு பிரியாவிடையெல்லாம் கொடுத்தார் நடிகை.

வேறு ஒருவருடன் காதல்
ஆனால் கடைசியில் நடிகர் கம்பி நீட்டி விட பணம் போச்சே, வாழ்க்கை போச்சே என்று புலம்பிய நடிகை தற்போது வேறு ஒருவரை செட் செய்து காதலில் லயித்துக்கொண்டிருக்கிறார்.

பனிப்போர்
இந்நிலையில் அந்த நடிகருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறதாம். வயசானாலும் நடிகைகள் அவருடன் சுற்றுவதை விரும்புகிறார்களாம். அதிலும் அந்த நடிகருக்காக இரு நடிகைகளுக்கு இடையே முடியை பிடித்துக்கொள்ளாத குறையாக பனிப்போர் நடந்து வருகிறதாம்.

அப்பாவி கதாப்பாத்திரம்
அதில் ஒரு நடிகை நம்ம ஊரு அம்மணியாம். நடனத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அந்த நடிகை, தொடர்ந்து அப்பாவி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பத்திக்கிச்சு
பார்த்தவுடன் அய்யோ பாவம் என்று ச்சு கொட்டும்படி நடிப்பில் பட்டையை கிளப்பும் நடிகை, சமீபத்தில் நடிகருடன் சேர்ந்து நடித்தாராம். அப்போதே இருவருக்கும் பத்திக்கிச்சு என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

கரெக்ட் செய்யனும்
இருப்பினும் நடிகர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அடிக்கடி நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறாராம் நடிகை. எப்படியாவது நடிகரை கரெக்ட் செய்துவிட வேண்டும் என்பதில் நடிகை உறுதியாக உள்ளாராம்.

என்னவோ செய்கிறது
என்னதான் தமிழ் தெலுங்கு என நடித்து வந்தாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது நடிகரை பார்க்காவிட்டால் என்னவோ செய்கிறது என நட்பு வட்டாரத்திடம் புலம்புகிறாராம் நடிகை. இதனை கேள்விப்பட்ட கோலிவுட், இந்த நடிகருக்கு மட்டும் எப்படியடா இப்படி மடங்குகிறது என தீவிரமாக டிஸ்கஸ் செய்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











