அந்த ஒரு காரியம்.. வாயால் வந்த வினை.. ஒதுக்கும் குடும்பம்.. கடும் மன உளைச்சலில் பிரபல நடிகை!

Recommended Video

நடிகருடன் மீண்டும் காதலை ரீசார்ஜ் செய்த பிரபல நடிகை.

சென்னை: குடும்பத்தாரின் அரவணைப்பு கிடைக்காமல் பிரபல நடிகை ஒரு தீவிர மன உளைச்சலில் உள்ளார்.

பெரிய குடும்பத்தை சேர்ந்த அந்த மூத்த நடிகை சினிமாவில் ஹீரோயின் என்று ஜோடி சேர்ந்ததே இப்போது கொண்டாடப்படும் முன்னணி நடிகருடன்தான்.

நடிப்பு பின்புலத்தை கொண்ட அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தப்போதும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுகுக்கு சொற்ப படங்களில்தான் நடித்திருக்கிறார் அந்த நடிகை.

விவாகரத்து

விவாகரத்து

முதல் கணவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த வாழ்க்கையும் அவருக்கு திருப்தியளிக்கவில்லை.

டான்சருடன் டேட்டிங்

டான்சருடன் டேட்டிங்

இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. இதனை தொடர்ந்து சினிமா தயாரிக்கப்போவதாக நடன கலைஞருடன் டேட்டிங்கில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றெல்லாம் பேச்சு எழுந்தது.

சொத்துப்பிரச்சனை

சொத்துப்பிரச்சனை

ஆனால் அந்த உறவும் நீடிக்கவில்லை. இந்நிலையில் வீட்டில் சொத்துப்பிரச்சனை மகனை பராமரிப்பதில் எழுந்த சிக்கல் என குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் இழுத்தார் நடிகை.

ஓரங்கட்டிய குடும்பம்

ஓரங்கட்டிய குடும்பம்

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சினிமாத் துறையில் இருக்க மொத்த குடும்பத்தையும் மீடியாக்களுக்கு முன் தரக்குறைவாக பேசினார் நடிகை. இதனால் நடிகையால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது என ஓரங்கட்டிவிட்டனர்.

திட்டிய மக்கள்

திட்டிய மக்கள்

இதுநாள் வரை பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த நடிகை அண்மையில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமாகிவிட்டார். அங்கேயும் நல்லப் பெயர் மக்கள் திட்டிதான் தீர்த்தார்கள்.

எப்படி சமாளிப்பது

எப்படி சமாளிப்பது

இந்நிலையில் தற்போது குடும்பத்தினரால் ஓரங்கட்டுப்படுவதை எண்ணி பெரும் மன உளைச்சலில் உள்ளாராம் நடிகை. கையில் பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக எப்படி சமாளிப்பது என கவலையில் இருக்கிறாராம் நடிகை.

வாய்தான் பிரச்சனை

வாய்தான் பிரச்சனை

வீட்டுப் பிரச்சனையை வீட்டோடு நிறுத்திக்கொள்ளாமல் காவல் நிலையம் வரை கொண்டு சென்றதோடு, மீடியா முன்பு அவதூறாக பேசியது என நடிகையின் வாய்தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்கின்றனர் நெருங்கிய வட்டாரத்தினர்.

புலம்பும் நடிகை

புலம்பும் நடிகை

எந்த அரவணைப்பும் இல்லாமல் தனித்து நிற்கும் நடிகை பார்ப்பவர்கள் பழகியவர்கள் என அனைவரிடமும் புலம்பி வருகிறாராம். போதா குறைக்கு சமூக வலைதளங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறாராம்.

என்ன திடீர் பாசம்

என்ன திடீர் பாசம்

இதனையறிந்த குடும்பத்தினர் சொத்துதான் முக்கியம் என குடும்பத்தையே நடுத்தெருவுக்கு இழுத்தவருக்கு இப்போது என்ன திடீர் பாசம் வந்துவிட்டது என்கிறார்களாம். ஆனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ள நடிகை எப்படியாவது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தால் போதும் என்று இருக்கின்றாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X