வாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்!
பிரம்மாண்ட ஹீரோ ஒருவரை நம்பி முன்னணி ஹீரோயின் ஒருவர் மிக மோசமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிரம்மாண்ட ஹீரோ ஒருவரை நம்பி முன்னணி ஹீரோயின் ஒருவர் மிக மோசமாக ஏமாற்றம் அடைந்துள்ளார்.
தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் படங்களில் அதுவும் ஒன்று. தமிழிலும் பல மொழிகளிலும் அந்த படம் வெளியாகி ஹிட் அடித்தது. சரியாக இரண்டு வருடம் முன்பு அந்த பிரம்மாண்ட படம் வெளியானது.
முதல் பாகம் பெரிய வெற்றிபெற்றதை அடுத்து வெகுவேகமாக இரண்டாவது பாகம் தயார் ஆனது. அந்த படத்தில் நடித்த எல்லோரும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தனர்.

எல்லாம் வெற்றி
யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு இரண்டாவது பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் அதன்பின் அந்த படத்தில் நடித்த யாருக்கும் பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

நட்பு
இந்த படத்தின் ஹீரோவிற்கும், ஹீரோயினுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. படத்திலேயே இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் நிறைய இருந்தது. படத்தில் நடித்த போதே இவர்கள் காதலிப்பதாக நிறைய கிசு கிசுக்கள் வெளியானது.

ஆனால் இல்லை
அதேபோல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு பின் இவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. சில நாட்கள் மட்டும் தொடர்பில் இருந்துவிட்டு பின் பிரிந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

என்ன காரணம்
அந்த ஹீரோயின் படத்திற்கு பின் பெரிய அளவில் எடை போட்டு மிகவும் மோசமான தோற்றத்திற்கு சென்றுவிட்டார். அதேபோல் அவருக்கு அதன்பின் பட வாய்ப்பும் அமையவில்லை. இதனால் அந்த ஹீரோ இப்போதெல்லாம் அவரிடம் பேசுவதே இல்லையாம்.

என்ன பிரிவு
போன் செய்தால் கூட அந்த ஹீரோ இப்போதெல்லாம் சரியாக பதில் அளிப்பது இல்லையாம். இப்போது அந்த ஹீரோ இந்தி ஹீரோயின் ஒருவருடன் நெருக்கமாகி இருப்பதாக செய்திகள் வருகிறது.


Click it and Unblock the Notifications











