என்ன முடி இது.. ஹேர் ஸ்டைலை மாற்றிய மேக் அப் ஆர்டிஸ்ட்.. கடுப்பான முன்னணி ஹீரோ.. நடந்தது என்ன?
சென்னை: தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி ஹீரோ ஒருவர் தனது ஹேர் ஸ்டைல் காரணமாக கடுமையான கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த ஹீரோ தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். தொடக்க காலத்தில் அவரின் ஹேர் ஸ்டைல் மிக சிறப்பாக இருக்கும்.
பார்த்ததும் வாவ் சொல்லும் அளவிற்கு அவரின் ஹேர் ஸ்டைல் இருந்தது. அவரை பார்த்து பலர் அவரைப்போலவே முடியை வைக்க தொடங்கினர்.

முடி
அவரின் ஹேர் ஸ்டைலும் படத்திற்கு படம் மாற தொடங்கியது. இதை பலரும் பாராட்டியும் வந்தனர். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென முடி கொட்டும் பிரச்சனை ஏற்பட்டது. அதிகமாக கெமிக்கல் பயன்படுத்துவதால் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகம் ஆகி இருக்கிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த ஹீரோ பல ட்ரீட்மென்ட்களை எடுத்து உள்ளார். ஆனால் அவர் எடுத்த எந்த விதமான சிகிச்சைகளும் அவருக்கு உதவியாக இல்லை.

சிகிச்சை
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவர் முடிக்கு சிகிச்சை எடுப்பதை நிறுத்தி இருக்கிறார். அவர் ஹீரோ என்பதால் முடியை மாற்ற நிறைய கெமிக்கல் பயன்படுத்துவார்கள். இது எல்லாம் சேர்ந்து அவருக்கு மொத்தமாக முடி கொட்டி சொட்டை விழுந்துள்ளது. இதையடுத்து அவர் முடியை செயற்கையாக நடும் டிரான்ஸபிளாண்ட் சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு இடையில் அவர் வேறு படத்தில் கமிட் ஆனார். அதனால் அந்த படத்தில் மட்டும் விக் வைத்து அவர் நடித்தார் .

விக்
ஆனால் அவர் விக் வைத்ததை பலரும் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக கிண்டல் செய்தனர். என்ன மாதிரியான லுக் இது என்று கடுமையாக கிண்டல் செய்தனர். அவரின் ரசிகர்களே அவரை கடுமையாக கிண்டல் செய்தனர். இதையடுத்து அவருக்கு புதிதாக முடி வளர்ந்தது. இந்த புதிய முடியை வைத்து அவர் நடித்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அவரின் லுக்கும் சிறப்பாக இருந்தது. அட ஆள் சிறப்பாக இருக்கிறாரே என்று அவரை பலரும் பாராட்ட தொடங்கினார்கள். ஆனால் அதற்கு அடுத்த படத்திலேயே அவரின் லுக் மோசமாக இருந்தது. விக் வைத்தது போன்ற லுக்கில் அவர் மோசமாக காணப்பட்டார். இதை பலரும் கிண்டல் செய்து இருந்தனர்.

புதிய படம்
இதை அடுத்து தற்போது நடிக்கும் படத்திலாவது நல்ல லுக்கில் இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் புதிய பட லுக்கில் விக் வைத்து இருப்பதாக புகார் வந்துள்ளது. அதோடு அவரின் லுக் மிகவும் மோசமாக இருப்பதாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த முன்னணி ஹீரோ ஒருவர் தனது ஹேர் ஸ்டைல் காரணமாக கடுமையான கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு தனது ஹேர் ஸ்டைலிஸ்ட்டை அவர் உடனடியாக மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. என்னுடைய தோற்றம் விக் வைத்தது போல இருக்கிறது. இனியும் இந்த தோற்றத்தில் இருக்க விரும்பவில்லை என்று கூறி அவர் தனது லுக்கை மாற்றி இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











