இளம் மனைவியுடன் சண்டை.. கடவுள் நடிகர் போட்ட ''அந்த'' கண்டிசன்.. கடைசியில் இப்படி பண்ணிட்டாரே!

சமீபத்தில் காதலியை மணம்முடித்த தீ பிடிக்க நடிகருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

சென்னை: சமீபத்தில் காதலியை மணம்முடித்த கடவுள் நடிகருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனையை மூன்றாம் நபர் வந்து தீர்க்கும் அளவிற்கு சென்று உள்ளதாம்.

கோலிவுட்டில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆன அந்த கடவுள் நடிகர் வரிசையாக நிறைய ஹிட் படங்களில் நடித்தார். அதன்பின் சில பிளாப்களை கொடுத்தவர், முன்னணி நடிகர் ஒருவருடன் சேர்ந்து நடித்தார்.

அதன்பின் 2013ல் நடித்த காதல் படம் ஒன்று பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் என்று பலருக்கும் அந்த படம் பெரிய பிரேக் கொடுத்தது. படத்தின் கதை பழைய கதையாக இருந்தாலும் வரவேற்பை பெற்றது. படமும் மக்கள் மத்தியில் பெரிய ரீச் கொடுத்தது.

கல்யாணம் எப்படி

கல்யாணம் எப்படி

இதனால் அந்த ஹீரோயினைதான் கடவுள் ஹீரோ கல்யாணம் செய்ய போகிறார் என்று செய்திகள் வந்தது. அந்த கடவுள் ஹீரோவின் தம்பி, அந்த ஹீரோயினை பொது மேடைகளில் அண்ணி அண்ணி என்று பாசமாக அழைத்து வந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அந்த டாப் ஹீரோயின் வேறு ஒரு இயக்குனர் உடன் காதலில் ஐக்கியம் ஆகி, தற்போது கல்யாணம் செய்யும் முடிவிற்கு சென்றுவிட்டார். இதனால் சிங்கிள் ஆன அந்த கடவுள் ஹீரோ இளம் ஹீரோயின் ஒருவருடன் மிங்கிள் ஆனார். தன்னை விட பல வருடம் இளைய அந்த நடிகையை அவர் திருமணம் செய்து கொண்டார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இவர்கள் இருவரும் நடித்த ஒரு படம்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். திருமணத்திற்கு முன் அந்த ஹீரோயின், கடவுள் நடிகரிடம் நிறைய கண்டிசன்களை போட்டு இருக்கிறார். அதில் முக்கியமான கண்டிஷன் படத்தில் தொடர்ந்து திருமணத்திற்கு பின்னும் நடிப்பேன் என்பதாகும். இதற்கு அந்த நடிகரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இப்போது இல்லை

இப்போது இல்லை

திருமணம் முடிந்து இத்தனை நாட்கள் நன்றாக இருந்த அவர்கள் உறவில் தற்போது சிக்கல் வந்துள்ளது. அந்த நடிகையை இனிமேல் நடிக்க கூடாது என்று கடவுள் நடிகர் ஆர்டர் போட தொடங்கிவிட்டாராம். அதோடு வேறு ஹீரோக்கள் உடன் பேச கூடாது, பார்ட்டி செல்ல கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறாராம்.

என்ன மோசம்

என்ன மோசம்

அதோடு விழாக்களுக்கு செல்ல கூடாது. அதிகம் சாட் செய்ய கூடாது. கவர்ச்சி படங்களை அப்லாட் செய்ய கூடாது என்றும் கூறி வருகிறாராம். இதனால் அந்த நடிகையும் செம கடுப்பில் இருக்கிறார் என்கிறார்கள்.

என்ன கோபம்

என்ன கோபம்

இதனால் அவர்களுக்கு இடையில் தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதை இன்னொரு இயக்குனர் தற்போது பேசி சரி செய்து இருக்கிறார். இன்னும் சில நாட்களில் இவர்கள் கோர்ட் படியை ஏறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X