சல்லிக்காசு இல்லாமல் நடுத்தெருவில் டாப் ஹீரோ..மனைவிக்கு ரகசிய தூது!

சென்னை: திரையுலகில் எத்தனையோ விவாகரத்து வழக்குகள் வந்தாலும், இந்த வாரிசு நடிகரின் கேஸ் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மனைவியைப் பிரிந்துவிட்டு, பாடகியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த அந்த நடிகருக்கு, இப்போது ஒட்டுமொத்த கரியரும், பொருளாதாரமும் அடியோடு சரிந்துவிட்டது.

ஊத்தி மூடியாச்சு: விவாகரத்து வழக்கில் நடிகரின் மனைவி 'இடைக்கால ஜீவனாம்சம்' கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், நடிகருக்கோ ஜீவனாம்சம் கொடுப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதைத் தாண்டி, ஜீவனாம்சம் கொடுக்க நடிகரிடம் சல்லிக்காசு கூட இல்லை. சமீபத்தில் தான் அவர் கோடிகளைக் கொட்டி தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், காமெடி நடிகரை வைத்து எடுத்த படமும் பாதியில் நிற்கிறது, அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த படமும் பாதியிலேயே முடங்கிக் கிடக்கிறது.

பணத்தை சுருட்டிய பாடகி: நடிகரிடம் இருந்த பணத்தை அந்தப் பிரபல பாடகி சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார். அதோடு நிற்காமல், அந்த நடிகருக்கு தவறுமான ஐடியாவையும் கொடுத்து மாட்டிவிட்டுள்ளார். ஜீவனாம்சம் கொடுக்காமல் இருப்பதற்காக என்னிடம் காசு இல்லை... இந்த வழக்கினால் நான் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்... அதனால் நான் இனி நடிக்க மாட்டேன் என்று மீடியாவில் சொல்லிவிடு. அப்போதுதான் உன் மீது பரிதாபம் என்று அந்தப் பாடகி நடிகரின் மூளையைக் கெடுத்துள்ளார். பாடகியின் பேச்சைக் கேட்டு மீடியாவில் பேசிப் பெரிய சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார் அந்த நடிகர். அந்தப் பாடகியின் சகவாசத்தால் வெளிநாட்டு போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கண்டதை பேசி இருக்கிறார்.

gossip tamil gossip

மனைவிக்கு தூது: தற்போது ஆன்மீகப் பாதைக்குத் திரும்பி இருக்கும் அந்த நடிகர், மெல்ல சுயநிலைக்குத் திரும்பியுள்ளார். இப்போது திரைமறைவில் சில முக்கியப் புள்ளிகள் மூலமாகத் தன் மனைவிக்குத் 'தூது' அனுப்பி இருக்கிறார். என்னை மன்னித்துவிடு... நம் குழந்தைகளுக்காக நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம். நடிகரின் இந்த திடீர் அந்தரங்கத் தூதுக்கு அவரது மனைவி இன்னும் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார். நடிகர் இப்படித் திடீரென மனைவியோடு சேரத் துடிப்பதற்குக் காரணம் பாசம் மட்டுமல்ல, பணம் தான் முக்கிய காரணம். நடிகரிடம் இப்போது படமெடுக்கக் காசில்லை, ஆனால் அவரது மாமியாரிடம் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடக்கிறது. மாமியார் நினைத்தால் நடிகரின் கரியரையே தூக்கி நிறுத்த முடியும். பாடகியின் மாய வலையிலிருந்து சிக்கிய அந்த நடிகர் இப்போ புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X