ரீமேக் கதை வேண்டும்.. ஹிட் படத்தை பார்த்து கதை கேட்ட பிரபல ஹீரோ.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்!
Recommended Video
சென்னை: தமிழின் முன்னணி ஹீரோ ஒருவர் இந்தி படங்களை ரீமேக் செய்து அதில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.
கோலிவுட் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. மசாலா படங்களின் எண்ணிக்கை குறைந்து, அதிக அளவில் நல்ல கதை கொண்ட படங்கள் வெளியாகி வருகிறது.
அதிலும் நிறைய வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் இப்போதெல்லாம் அதிகமாக தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மோசம்
இந்த நிலையில் தமிழில் வெளியாகும் ஹிட் படங்களை பிற மொழியில் மொழி பெயர்த்து வருகிறார்கள். தமிழில் வெளியாகும் படங்கள் அதிகமாக கன்னடா மற்றும் இந்தியில் மொழி பெயர்ப்பாகி வருகிறது. அதிலும் நல்ல கதை கொண்ட படங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆனால் என்ன
இந்த நிலையில்தான் தமிழில் பிரபல ஹீரோ ஒருவர் சமீபத்தில் ரீமேக் படம் ஒன்றில் நடித்தார். இந்தியில் ஹிட் அடித்த ரீமேக் படத்தை பிரபல இயக்குனரை வைத்து அந்த நடிகர் வெளியிட்டார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

வரவேற்பு
விமர்சன ரீதியாகவும் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த ஹீரோவிற்கு இந்த படம் பெரிய பிரேக்காக இருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து இந்த படம் பண்ணியதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இப்போது என்ன
இதனால் அவரைப்போலவே இன்னொரு பெரிய ஹீரோவும் ரீமேக் படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார் என்கிறார்கள். இந்தியில் ஹிட் அடித்த ஆக்சன் படம் ஒன்றை ரீமேக் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்காக இயக்குனரை தேடி வருகிறார் என்கிறார்கள்.

முடிவு இல்லை
ஆனால் இயக்குனர்கள் யாரும் ரீமேக் கதையை படமாக எடுக்க முன் வரவில்லையாம். என்னிடம் நல்ல கதை இருக்கிறது அதையே பண்ணலாம் என்று இயக்குனர்கள் ஹீரோவை நச்சரித்து வருகிறார்களாம். அதே சமயம் பண்ணினால் ரீமேக் படம்தான் பண்ணுவேன் என்று அந்த ஹீரோ ஒற்றைக்காலில் நிற்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











