சீனியர் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்.. அம்மணி பேச்சுகேட்டு மார்க்கெட் இழந்த நடிகர்!

By Staff

சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அந்த ''கே'' எழுத்து நடிகர். சீனியர் நடிகை ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டு, அவரின் பேச்சைக்கேட்டு ஆட்டம் போட்டதால், படவாய்ப்பை இழந்து தற்போது எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த ''கே'' எழுத்து நடிகர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்பின் இவருக்கு வில்லன் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிப்பின் நாயகன் படத்திலேயே வில்லனாக நடித்திருந்தார். இதனால், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான வில்லனாக இவர் மாறினார். இதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து பெயர் எடுத்தார்.

A famous actor who had a relationship with a senior actress

ஹீரோவாக மாறினார்: ஒரு கட்டத்தில் வில்லனாக நடித்து அலுத்துப்போனதால், இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தார். இதை புரிந்து கொண்ட பிரபல இயக்குநர் ஒருவர், தனது கதையை அவரிடம் சொல்லி ஒகே வாங்கிவிட்டார். '' கே'' எழுத்து நடிகரும் கதையின் மீது அக்கறை இல்லாமல், ஹீரோவா நடிச்சா போதும் என்று முடிவெடுத்து அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், ''கே '' எழுத்து நடிகருக்கு ஹீரோ என்ற அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, கிராமத்து கதை அம்சம் கொண்ட சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக போகாததால் மீண்டும் ரூட்டை மாற்றி டாப் நடிகரின் நண்பனாக நடிக்கத் தொடங்கினார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நன்றாகவே கைக்கொடுத்தது.

சீனியர் நடிகையுடன் உறவு: இப்படி பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகருக்கு, பிரபல சீனியர் நடிகை ஒருவரை தனக்கு மேனேஜராக நியமித்துக் கொண்டார். அந்த நடிகை மேனேஜராக மட்டும் இல்லாமல், ''கே '' எழுத்து நடிகருடன் நெருங்கி பழகினார். மேலும், சினிமா கதை விஷயத்திலும், சம்பள விஷயத்திலும் தலையிட்டு ''கே'' எழுத்து நடிகரின் பெயரைக் கெடுத்தார். இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் கிசுகிசு எழுந்தாலும், அதைபற்றி கவலைப்படாத ''கே '' எழுத்து நடிகர், சீனியர் நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவர் குறித்து செய்திகள் பரவிய போதும், இருவருமே இதற்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.

காணாமல்போன நடிகர்: கதை, படத்தை ஒப்பந்தம் செய்வது என அனைத்தும் அந்த சீனியர் நடிகையின் கையில் சென்றதால், பல இயக்குநர்கள் இவரை கைகழுவத் தொடங்கினார்கள். இதனால், ஒரு கட்டத்தில் ''கே '' எழுத்து நடிகருக்கு படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தற்போது இந்த கே எழுத்து நடிகர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று கூட தெரியாத அளவிற்கு சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். ''கே'' நடிகருக்கு படவாய்ப்பு குறைந்ததால், அவரை கை கழுவிய, அந்த சீனியர் நடிகையின் மகன் தற்போது பெரிய ஹீரோவாக இருக்கிறான். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X