இந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்!
சென்னை: உச்ச நடிகை கோவில் கோவிலாக சுற்றுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து உச்ச நடிகையாக உள்ளார் அந்த நடிகை. நடிகைக்கு தான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டடித்தாலும் லவ் மட்டும் ஃபெயிலியர் ஆகி கொண்டே இருக்கிறது.
சினிமாவில் பெரிய இடத்தை பிடித்தாலும் அம்மணிக்கு காதல் மட்டும் செட்டே ஆகாமல் இருந்தது. தற்போது இயக்குநர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறார் நடிகை.

முறிந்த காதல்கள்
இதற்கு முன்பு இருவரை காதலித்த நடிகை, தனது காதலை கல்யாணம் வரை கொண்டு செல்ல முயன்றார். ஆனால் என்ன யார் கண்பட்டதோ இரண்டு காதல்களும் முறிந்தது.

சினிமாவில் வெறித்தனம்
மூத்த நடிகரை காதலித்த நடிகை திருமணம் முடித்த கையோடு சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தார். ஆனால் நினைத்தது எதுவும் நடக்காததால் நொந்து போன நடிகை சினிமாவில் வெறித்தனமாக நடித்து வருகிறார்.

அள்ளிக்கொடுத்த நடிகை
தன்னுடைய காதலர்களுக்காக கோடிக்கணக்கில் அள்ளி அள்ளி கொடுத்து நடிகை ஏமாந்ததுதான் மிச்சம். இந்நிலையில் தற்போது காதலித்து வரும் நபருக்கும் அள்ளிக்கொடுக்கிறார்.

கோபம், பயம்
ஆனால் காதலரோ குடிபோதையில் நண்பர்களிடம் காதலி நடிகை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது. இந்த விஷயம் நடிகை காதுக்கு போகவே ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் பயம் என உள்ளாராம்.

அதிர்ச்சியை நடிகை
ஏற்கனவே இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் காதலரின் இந்த செயலால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் நடிகை. காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா, காதலருக்காக மதமாற்றம் என இருந்த நடிகைக்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கோவில் கோவிலாக..
எங்கே இந்த காதலும் பறிபோயிவிடுமோ என்று பயத்தில் உள்ள நடிகை அதற்காகதான் கோவில் கோவிலாக சுற்றி வருகிறாராம். ஏற்கனவே காதலருடன் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார் நடிகை.

உச்ச நடிகரின் மகள்
இதனைதொடர்ந்து தென் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் காதலருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார் நடிகை. அம்மன் கோவிலுக்கு சென்றபோதே உச்ச நடிகரின் மகள் இரண்டாவது திருமணத்திற்கு முன்பு அந்த கோவிலுக்கு சென்று வந்தது நினைவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











