திருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே!
திருட்டு நகை விவகாரத்தில் வாரிசு நடிகையின் பெயர் தான் அடிபடுகிறது.
Recommended Video
சென்னை: திருச்சி திருட்டு நகையை வாங்கியது அந்த வாரிசு நடிகை தான் என கோலிவுட்டில் ஒருவரை கை காட்டுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது திருச்சி நகைக்கடை திருட்டு சம்பவம். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதில் பிரபல நடிகை ஒருவர் கொள்ளையர்களிடம் நகை வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை
போலீசார் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை. பிரபல நடிகை என்று மட்டும் தான் கூறி வருகின்றனர். விரைவில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

வாரிசு நடிகை
ஆனால் புள்ளி வைத்தாலே கோலம் போடும் வல்லவர்கள் நம் மக்கள். அவர்களின் கணிப்புப்படி பிரபல வாரிசு நடிகை தான் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நடிகை தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்த போதும், தற்போது வரை முன்னணி நடிகையாக தான் கருதப்படுகிறார்.

பரபரப்பு
அடுத்து தயாராக உள்ள இரண்டு உச்ச நடிகர்களின் படங்களில் கூட அவரது பெயரே அடிப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு சர்ச்சையில் நடிகை சிக்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எது உண்மை
அல்பத்தனமாக நகைக்கு ஆசைப்பட்டு இப்படி பெயரை கெடுத்துக்கொண்டாரே என அவரது நலம் விரும்பிகள் வருத்தப்படுகின்றனர். ஒருவேளை அவருக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட்டதா என்பதும் தெரியவில்லை. போலீசோ சம்மந்தப்பட்ட நடிகையின் தரப்போ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசாத வரை, இதுபோன்ற கதைகள் இன்னும் நிறைய வரத்தான் செய்யும்.


Click it and Unblock the Notifications











