உங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு!

முன்னணி மாஸ் நடிகர் ஒருவருடன் படம் எடுப்பதற்கு ஆசைப்பட்டு அணுகிய வெற்றிகரமான இயக்குனர் ஒருவருக்கு அவமானம்தான் மிஞ்சி இருக்கிறதாம்!

Recommended Video

தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ

சென்னை: முன்னணி மாஸ் நடிகர் ஒருவருடன் படம் எடுப்பதற்கு ஆசைப்பட்டு அணுகிய கோலிவுட்டின் வெற்றிகரமான மாஸ் இயக்குனர் ஒருவருக்கு அவமானம்தான் மிஞ்சி இருக்கிறதாம்!

தமிழில் சில இயக்குனர்கள் நடிகர்கள் கூட்டணி எப்போதும் வெற்றிகரமாக இருக்கும். சில இயக்குனர்கள் ஒரு சில நடிகர்கள் உடன் படம் எடுப்பதை அதிகம் விரும்புவார்கள்.

அப்படி தமிழில் ஒரு இயக்குனர் மற்றும் நடிகர் கூட்டணி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறது. தமிழில் பெஸ்ட் கூட்டணி இதுதான் என்று கூறுகிறார்கள்.

எல்லாம் ஹிட்

எல்லாம் ஹிட்

இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த படங்கள் எல்லாமே மாஸ் ஹிட். சமீபத்தில் வெளியான படமும் பெரிய ஹிட் கொடுத்தது. அந்த படத்தின் இயக்குனர் மீண்டும் அதே ஹீரோவுடன் அடுத்த வருடம் படம் ஒன்று எடுக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி படம்

எப்படி படம்

இந்த நிலையில் அதே இயக்குனர் இன்னொரு ஹீரோ ஒருவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டு இருக்கிறார். இதற்காக அந்த இயக்குனர் இன்னொரு மாஸ் ஹீரோவை அணுகி உள்ளார். ஆனால் அந்த மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இவர்கள் இருவரும் இணைவதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது.

ஹீரோ

ஹீரோ

ஆனால் அப்போது அந்த படம் தொடங்காமல் டிராப் ஆனது. படத்தின் தயாரிப்பு குழுவுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த படத்தில் இருந்து மாஸ் ஹீரோ நீக்கப்பட்டார். இதனால் அதே கதையை, வேறு ஹீரோவிற்கு கொடுத்து, அதை படமாக எடுத்தனர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில்தான் அந்த மாஸ் ஹீரோவை அணுகி படம் எடுக்க அந்த இயக்குனர் முயன்றுள்ளார். போன படம்தான் டிராப் ஆகிவிட்டது. இந்த படத்தையாவது எடுக்கலாம் வாருங்கள் என்று கேட்டு இருக்கிறார். என்னிடம் நல்ல கதை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நீங்கள்

நீங்கள்

ஆனால் நான் நடிக்க மாட்டேன். நீங்கள் அந்த ஹீரோவை வைத்தே இயக்கிக் கொள்ளுங்கள். உங்கள் இணைதான் நன்றாக இருக்கிறது. பிரச்சனை வேண்டாம், என்று மாஸ் ஹீரோ கண்டிப்பாக கூறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X